திருமதி முருகேசு இலட்சுமி பிறப்பு : 1 யூலை 1927 — இறப்பு : 5 சனவரி 2012
யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இலட்சுமி அவர்கள் 05-01-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், லிங்கேஸ்வரி(நெதர்லாந்து), தியாகராசா(யேர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும், துரைராசா(ST நெதர்லாந்து), தங்கரத்தினம்(யேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுரேஸ்(நெதர்லாந்து), சதீஸ், நாதன்(நெதர்லாந்து), சர்மிலா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு அம்மமாவும், சுரேஸ்(மைக்கேல்-நெதர்லாந்து), றமேஸ்(கட்டார்), தினேஷ்(கட்டார்), சசி(இலங்கை) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், சிவகொழுந்து, சரஸ்வதி, இராசம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும், லிங்கம், அப்பன், ராகினி(தேவா), சுபயசிறி(ராசன்-யேர்மனி), கசிதா(மாலினி), நிர்மலாதேவி(பூங்கிளி-சுவிஸ்), லதா, நிசா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் உசா, லிபோலினி, தனுஜா, விஜி, ராஜி, மதனி ஆகியோரின் அன்புப் பேத்தியும், வினுசா, அஜெய், சஞ்ஜேய், சச்சின், அய்ஷு, அய்ஷ்வின், விசுவா(இலங்கை), ஆகாஷ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment