Tuesday, December 13, 2011

தலைவர் குஷ்போனி நேரடி யுத்தத்தில் இறக்கவில்லை !


13 December, 2011
�பாதுகாப்புப் படைகள் அறிவித்திருப்பது போல தமது தலைவர் யுத்தத்தில் கொல்லப்படவில்லை. உயிருடன் பிடிபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, அதன்பின் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கிறார்� என்று கொதித்திருக்கிறது மாவோயிஸ்ட் அமைப்பு. இவர்களது தலைவர் காட்டுக்குள் நடைபெற்ற யுத்தத்தில் கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டார் என்று பாதுகாப்புப் படைகள் அறிவித்திருந்தன.ஆயுதப் போராட்டம் நடாத்தும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் கிஷென்ஜி, குஷ்போனி காட்டுக்குள் 207-ம் கோப்ரா பட்டாலியன் படைப்பிரிவும், 184-ம் சி.எஸ்.பி.எஃப். படைப்பிரிவும் இணைந்து நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று இரு தினங்களுக்குமுன் அறிவிக்கப்பட்டிருந்தது.

இயக்கத் தலைவர் கிஷென்ஜி கொல்லப்பட்ட தகவல் கேட்டு கொல்கத்தா விரைந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர் வராவர ராவ், �இது பாதுகாப்பு படைகளால் நடாத்தப்பட்ட போலி என்கவுன்டர். காட்டுக்குள் இவரைக் கைப்பற்றிய படையினர், அவரை சில மணிநேரம் கைதியாக அடைத்து வைத்திருந்தனர். அப்போது அவர் சித்திரவதை செய்யப்பட்டு, அவரிடமிருந்து இயக்கம் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டன. அதன்பின் அவரை சுட்டுவிட்டு, காட்டில் போட்டனர். காட்டுக்குள் நடைபெற்ற துப்பாக்கி யுத்தத்தில் தலைவர் கொல்லப்பட்டதாக போட்டோ சகிதம் தகவல் வெளியிட்டுள்ளனர். இது திட்டமிட்ட படுகொலை� என்று கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கிஷென்ஜி, தான் கொல்லப்பட்டாலும் தனது உடல் ராணுவத்தினரிடம் கிடைக்கக்கூடாது என்று சக போராளிகளிடம் கூறுவார் என்றும், அதற்காக கெரசின் நிரப்பிய கேன் ஒன்றை தனக்கு நெருக்கமான போராளி ஒருவரிடம் கொடுத்து வைத்திருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தலைவர் கொல்லப்பட்டால், அவரது உடலை அந்த இடத்திலேயே எரித்து விடுவதற்கான முன்னேற்பாடு அது என்றும் கூறப்பட்டு வந்தது. கிஷென்ஜி கொல்லப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட போட்டோக்களிலும் ஒரு வெள்ளை நிற கேன் காணப்படுகின்றது. இதுதான் அவர்களால் குறிப்பிடப்படும் கெரசின் கேனா என்பது சரியாகத் தெரியவில்லை.

கொல்கத்தாவில் வைத்துக் கருத்து தெரிவித்துள்ள வராவர ராவ், �பாதுகாப்பு படையினரால் உயிருடன் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் சுட்டுக் கொல்வது, இந்திய குற்றவியல் சட்டப்படி கொலை என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்திய பீனல் கோர்ட் சட்டப்பிரிவு 302-ன் படி, இந்தச் செயலைச் செய்த பாதுகாப்பு படையினரைத் தண்டிக்க வேண்டும்� என்று கூறியிருந்தார். ஜனநாயக உரிமைகளைக் காக்கும் அமைப்பு (Association for Protection of Democratic Rights � APDR) ஏற்பாடு செய்திருந்த ஊர்வலம் ஒன்றில் கலந்துகொண்ட போது, அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். �கொல்லப்பட்ட தலைவர் கிஷென்ஜி, தமது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட விரும்பியிருந்தார். அதை அரசு பயன்படுத்திக் கொள்ளாமல் அவரை உயிருடன் கைப்பற்றி, சுட்டும் கொன்று விட்டார்கள். இதனால், அரசுக்கும் மாவோயிஸ்ட் அமைப்புக்கும் இடையில் ஏற்பட்டிருக்கக்கூடிய சமாதான ஒப்பந்தம், இனி கேள்விக்குறிதான்� என்றும் கூறுகிறார் ராவ்.

கொல்கத்தாவில் APDR ஊர்வலத்தின் பின்னர், கொல்லப்பட்ட தலைவர் கிஷென்ஜியின் மருமகள் தீபா சகிதம் உட்துறை செயலர் ஜி.டி.கௌதமாவை சந்தித்த வராவர ராவ், �கிஷென்ஜியின் போஸ்ட்மாட்டம் அவரது சொந்த மாநிலமான ஆந்திராவில் தேசிய மனித உரிமைகள் சபை பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற வேண்டும்� என்ற கோரிக்கையை வைத்திருந்தார். �கிஷென்ஜியின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் யுத்தத்தில் ஏற்பட்டனவா, அல்லது க்ளோஸ்-ரேஞ்சில் சுடப்பட்டதால் ஏற்பட்டதா என்பது போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டில் தெரியவரும்� என்றும் அவர் கூறினார்.�கிஷென்ஜியின் உடல் போஸ்ட்மாட்டம் சோதனைக்காக மித்னாபூர் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கப்படும், அதன்பின் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்� என்று கொல்கத்தா போலீஸ் அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட நபர் கிஷென்ஜிதான் என்பதை உறுதி செய்துகொள்ள அவரது முன்னாள் சகாவும், தற்போது சிறையில் உள்ளவருமான தெலுகு தீபக் என்பவரை அழைத்து வந்து அடையாளம் காட்டுமாறு கூறியுள்ளார்கள். தேவை ஏற்படின் டி.என்.ஏ. சோதனைகளும் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.�ஆயுதம் தாங்கிய இயக்கத்தின் தலைவரான கிஷென்ஜிக்கு எப்போதும் போராளிகளின் பாதுகாப்பு இருக்கும். அவரைப் பாதுகாப்பதற்காக 15-20 பேரடங்கிய போராளிகள் படை ஒன்று அவரைச் சுற்றி நிற்பது வழக்கம். இந்த மெய்ப்பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் தனி ஆளாக கிஷென்ஜியின் உடல் காணப்பட்டது எப்படி?� என்று கேள்வி எழுப்பும் ராவ், �இவ்வளவு பாதுகாப்புடன் மறைவிடத்தில் இருந்த ஒரு போராளி இயக்கத்தின் தலைவரின் உடல் வீழ்ந்து கிடந்த இடம், எது தெரியுமா? ஜம்போலி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெறும் 5 கி.மீ. தொலைவில்! தனது மறைவிடத்தில் இருந்து தனியே இங்குவரை அவர் எப்படி வந்தார்?� என்றும் சந்தேகம் கிளப்புகிறார்.

இன்று (சனிக்கிழமை) காலை, கிஷென்ஜியின் உடல் வராவர ராவ்வுக்கு காண்பிக்கப்பட்டது. உயிரிழந்தது கிஷென்ஜிதான் என்பதை ராவ் உறுதிப்படுத்தினார். அதற்குமுன் கிஷென்ஜி கொல்லப்படவில்லை என்றும், பாதுகாப்பு படைகளின் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார் என்றும் மாவோயிஸ்ட் ஆதரவு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. �முற்றுகையை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்ற தலைவர், மீண்டும் உரிய நேரத்தில் ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்க வருவார்� எனவும் வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் அந்த இணையத்தளங்கள் இன்னமும் கூறுகின்றன.ஆனால், கிஷென்ஜி விஷயத்தில் இந்தக் கதை எடுபடுவதற்கு சான்ஸ் இல்லை. காரணம், அவரது உடல் நாளை ஆந்திராவிலுள்ள அவரது உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே அடுத்த திருப்பமாக, ஏற்கனவே செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிஷென்ஜியின் உடலில் 6 துப்பாக்கிக் குண்டுகளும், இரு கிரனைட் சிதறல்களும் காணப்பட்டதாக கூறுகின்றது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். துப்பாக்கிக் குண்டுகள் தொலைவில் இருந்து சுடப்பட்ட நிலையிலேயே உடலில் ஊடுருவின என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ரிப்போர்ட்டை வைத்து, கிஷென்ஜி கொல்லப்பட்டது போலி என்கவுன்டர் அல்ல என்கிறது போலீஸ்.ஆனால் வராவர ராவ், இது சந்தேகத்துக்குரிய மரணம்தான் என்பதில் இன்னமும் உறுதியாக உள்ளார். �நிச்சயமாக இது போலி என்கவுன்டர்தான். கொல்லப்பட்டவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தைவிட, வேறு பல காயங்கள் உடல் முழுவதும் இருப்பதைப் பார்த்தேன். அவரது கால்களில் தீயினால் எரிக்கப்பட்ட காயமும் உள்ளது. இந்தக் கொலைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தாவும், உட்துறை அமைச்சர் சிதம்பரமும்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.� என்றும் கூறுகிறார் அவர்.

No comments:

Post a Comment