Friday, November 18, 2011

யாழ் மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி மூவர் பாடுகாயம்!


நேற்று யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் பேருந்து ஒன்றுடன் சொகுசு ஊர்தி ஒன்று மோதிக்கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தும் யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு ஊர்தியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 52 அகவையுடைய தேவகுஞ்சரி பரஞ்சோதி என்ற பெண் உயிரிழந்ததுடன் அவரது கணவரான 60 அகவையுடைய செல்லமுத்து பரஞ்சோதி மற்றும் 33 அகவையுடைய ஆர்.சுதர்சன் 22அகவையுடைய எஸ்.தவசீலன் என்பவர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment