டேம் 999 படத்தை நாடு முழுவதும் தடை செய்யுமாறு கருணாநிதி கோரிக்கை
சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் டேம் 999 படத்தை, நாடு முழுவதும் திரையிடக்கூடாது என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வேளையில், உள்நோக்கத்துடன் சிலர் திட்டமிட்டு டேம் 999 என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படம் திரையிடப்பட்டால், தமிழகம், கேரள மாநில மக்களுக்கிடையே நிலவும் இணக்கமான சூழல் மாறி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே இந்தப் படத்தை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட மாட்டோம் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முன்னதாக டேம் 999 படத்தால், பார்லிமென்ட்டின் இருஅவையிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment