வாரஇறுதி தமிழ்ப் பாடசாலைகளை மூடுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் ஆலோசனை!! இப்பாடசாலைகள் மொழி கலாச்சாரத்தை பிள்ளைகளுக்கு தெளிவு படுத்தவே உள்ளன,இதை உருவாக்கியோர் தமிழ் பெற்றோரே அன்றி புலிகள் அல்ல,ஆனால் புலிகள் அங்கு பிச்சாரம் செய்ததென்னவோ உண்மைதான்.அதற்காக புலிகள் பாடசாலை என்பது அநியாயம்,அந்நிய விரோதம்!! |
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும்,இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு காவல்துறையினரின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்து டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய நெதர்லாந்து பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஒப்ஸ்ரெல்ரன், இந்தப் பாடசாலைகள் அரசாங்க கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்படவில்லை என்று கூறியுள்ளார்.
பாடசாலை நேரத்துக்குப் புறம்பாக அங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கல்வி புகட்டப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடசாலைகள் அம்ஸ்ரடாம், ரொட்டர்டாம், டென்ஹக், பிறெடா, என்டோவன், ஆன்ஹெம், லியூவோடென் போன்ற பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன.
இந்தப் பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க சட்டவாளர் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment