பீரங்கிமரத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்!! |
பீரங்கி கேள்விப்பட்டிருக்கிறோம்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. |
1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது.
82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும்.
எனவே, இம்மரத்தின் கீழே நிற்கக்கூடாது. ஏனென்றால், இப்பழம் கீழே விழும்போது மனிதனின் தலையில் விழுந்துவிட்டால் ஆளையே கொன்றுவிடுமாம். எனவே, இப்பழத்தை ஆட்கொல்லிப் பழம் என்றும் கூறுகிறார்கள். இந்த மரத்தின் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து மருந்து தயாரித்து புண்களில் தடவினால் புண்கள் ஆறிவிடுமாம்.
இலைகளை மென்று சாப்பிட்டால் வாயின் ஈறுகளில் உள்ள நுண் கிருமிகள் வெளியேறி பற்கள் சொத்தையாகாமல் காப்பாற்றப்படுமாம். இந்த மரங்களைத் தமிழ்நாட்டில் சில இடங்களில் காணலாம். இதனை நாகலிங்க மரம் என்று கூறுவார்கள். |
No comments:
Post a Comment