Tuesday, September 20, 2011

நெடுஞ்சாலையில் சாரத்துடன் நடந்த தமிழர் பரிதாபம் !


19 September, 2011 by admin
சில தினங்களுக்கு முன்னர் லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள( A Road)- வீதி ஒன்றில் தமிழர் ஒருவர் இரவுவேளையில் சாரத்துடன்(கைலி) நடந்து வந்துகொண்டு இருந்திருக்கிறார். இதனைக் கவனித்த பிறிதொரு தமிழர் தனது காரை நிறுத்தி உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா எனக்கேட்டபோது அவர் தனது சோகக்கதையைச் சொல்லியுள்ளார். இதனை அடுத்து நல்ல உள்ளங்கொண்ட இத் தமிழர் சாரத்துடன் வந்த தமிழரை வீடுவரைகொண்டு சென்று இறக்கிச் சென்றுள்ளார். அப்படி என்ன தான் நடந்தது என்று கேட்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குச் செல்லாம்.

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பது அல்ல பலருக்கு பல குண நடைகள் இருக்கும். அதில் ஒரு பழக்கம் தான் "தொற்றிகொள்ளுதல் என்பதாகும்". என்னடா என யோசிக்கிறீர்களா ? ஆம் வீட்டில் சும்மா இருப்பார்கள் ஆனால் அதே வீட்டில் ஒருவர் வெளியே புறப்பட்டால் போதும் உடனே தானும் வருவதாகக் கூறி தொற்றிக்கொள்ளுவார்கள் சிலர். இவர்களுக்கு இது ஒரு பழக்கமாக இருக்கும். இதேபோல சமீபத்தில் லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் ஒரு வீட்டில் நடந்த பாட்டி(கழியாட்ட நிகழ்வு) இறுதியில் சோகத்தில் முடிவடைந்துள்ளது. அதாவது நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்களை இறுதியாக அவரவர் வீட்டிற்கு கொண்டுபோய் விட தனது காரை ஸ்டாட் பண்ணியுள்ளார் ஏற்பாட்டாளர்.

ஆனால் அந்த வீட்டில் இருந்த குறிப்பிட்ட நபர் தானும் வருவதாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து வாகன ஓட்டுனர் "சரி போய் ஜீன்ஸைப் போட்டுக்கொண்டு வா" எனக் கூறியுள்ளர். அது எல்லாம் வேண்டாம் கிட்டத் தானே இறக்கப்போகிறோம் நான் சாரத்துடன் வருகிறேன் என்று கூறி இந்த தாவும் நபர் ஏறியுள்ளார். 3பேரை அவரவர் வீடுகளில் இறக்கிவிட்டு வாகன ஓட்டுனரும் குறித்த நபரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தவேளை துரதிஷ்டவசமாக பொலிசாரிடம் மாட்டியுள்ளனர். வானக ஓட்டுனர் மதுபோதையில் இருப்பதால் அவர் தொடர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாது எனக் கூறிய பொலிசார் வாகனத்தை அதே இடத்தில் பார்க் பண்ணச் சொல்லிவிட்டு ஓட்டுனரைக் கைதுசெய்து அவசரமாகக் கொண்டுசென்றுவிட்டனராம்.

சாரத்துடன் சென்றவர் பாடு அம்பேல் ஆகியுள்ளது. கைகளில் மோபைல் போனும் இல்லாதால் என்ன செய்வது என்று தெரியாது அவர் அப்படியே ஏ- வீதியில் நடக்கவேண்டி இருந்திருக்கிறது. இதேவேளை அவ்வழியால் சென்ற பிறிதொரு தமிழர் இவர் பரிதாபத்தைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்து உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்க அவரும் நடந்ததைக் கூறியுள்ளார். இதனை அடுத்து நல்ல உள்ளங்கொண்ட அத் தமிழர் சாரத்துடன் நடந்தவரை வீடுவரை கொண்டுசென்று இறக்கிவிட்டுச் சென்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. நல்லவேளை இன்னும் பிரித்தானியாவில் குளிர்காலம் ஆரம்பமாகவில்லை... இல்லை என்றால் இவர் நிலை கவலைக்கிடம் தான்.

இன்னும் எம்மில் பலர் காரை விட்டு இறங்காமல் வெளியே சென்று வரவேண்டிய தேவை இருந்தால் அப்படியே சாரத்துடன் காரில் செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது எனப் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் வாகனம் பழுதடைந்தால் அல்லது ஏதாவது ஒரு காரணத்துக்காக நடக்கவேண்டி வந்தால் அவர் நிலை என்னவாகும் என எவரும் நினைத்துப் பார்ப்பது இல்லை. சாரம் உடுப்பது தவறு என்று சொல்லவரவில்லை ஆனால் அதனுடன் வெளியே செல்லமுடியுமா ?

No comments:

Post a Comment