சில்க் ஸ்மிதாவின் உண்மைக் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்திப் படமான தி டர்ட்டி பிக்சரில், சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி காட்சிகள் உள்ளதாகவும், அவை ரஜினியை அவமதிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர்.
உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏக்தா கபூர் தயாரிப்பில், வித்யா பாலன் - நஸ்ருதீன் ஷா நடிக்கும் படம் தி டர்ட்டி பிக்சர். இந்தப் படம் மறைந்த தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகளுக்குக் காரணமாகியுள்ளது. இப்போது எழுந்துள்ள சர்ச்சை, படத்தில் ரஜினியை அவமானப்படுத்தியுள்ளனர் என்பது.
இந்தப் படத்தில் வயதான முன்னணி நடிகராக தோன்றுகிறார் நஸ்ருதீன் ஷா. அவரும் சில்க்கும் இணைந்து வருகிற காட்சிகளும் வசனங்களும் ரஜினியை அவமானப்படுத்துவது போல உள்ளனவாம்.
எனவே இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரஜினியின் பெரும்பாலான படங்களில் சில்க் ஸ்மிதா முக்கிய இடம்பெற்றிருப்பார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறுகையில், "தி டர்ட்டி பிக்சரில் நஸ்ருதீன் ஷா சீனியர் நடிகராக வருவார். ஆனால் சில்க் ஸ்மிதா காலத்தில் ரஜினி இளமையான சூப்பர் ஸ்டார். இந்த வித்தியாசத்தை ரசிகர்கள் புரிந்து கொண்டால் கோபப்பட மாட்டார்கள். ரஜினியை நாங்கள் அவமானப்படுத்தவில்லை. அவர் மட்டுமல்ல, யாரையுமே இந்தப் படத்தில் தவறாக சித்தரிக்கவில்லை," என்றார் |
நம்ம ரஜனியா நம்பவே முடியலேயே..
ReplyDelete