தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பி. சுசீலா இசைத் துறையில் தடம் பதித்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அவரின் இத்தகைய நெடிய இசைப் பயணத்தையும், சாதனையையும் பாராட்டி அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது டி.சுப்பராமி ரெட்டி லலித்கலா பரிஷத்.
நேற்று முன்தினம் (செப்.17) விசாகப்பட்டிணத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுசீலாவுக்கு விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாய், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் போச்ச சத்தியநாராயணா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இசைத் துறையில் இருந்து பிரபல பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், பின்னணிப் பாடகிகள் வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
No comments:
Post a Comment