பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு நாளுக்கு சராசரியாக 50 என்ற அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழ்வோருக்கு மட்டும் பிறப்பதாக அந்நாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 20,000 குழந்தைகள் இவ்வாறு பிறந்திருப்பதாக மேலும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது, பிரித்தானியாவில் பிறக்கும் நான்கு குழந்தைகளில் ஓன்று புலம் பெயர்ந்தவர்களுடையது. இந்த நிலைமை நீடிக்குமானால் இனி வரும் காலங்களில் பிரித்தானியாவை தாயகமாக கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற சேவைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.
தொழில் காரணமாகவும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்தவர்களே இதில் முன்னிலை வகிக்கின்றார்கள்.
|
No comments:
Post a Comment