[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 02:17.30 AM GMT ]
நெதர்லாந்தில் ஈழக் கோரிக்கையை வியாபிக்கும் நோக்கில் 20 பாடசாலைகள் இயங்கி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தொடரப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்தத் தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நெதர்லாந்தில் வாழும் தமிழ் சிறுவர் சிறுமியருக்காக இந்தப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இந்த புலிகளின் பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றனர்.
மீண்டும் இலங்கைக்கு சென்று வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கும் போர்வையில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
சிங்கள விரோத, ஈழ கோட்பாடு, இனவாத கோட்பாடு உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான கருத்துக்கள் இந்த பாடசாலைகளில் போதிக்கப்படுவதாக குறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment