10 August, 2011
தெய்வ திருமகள் படத்தின் வெற்றிவிழா குறித்த செய்தியை படித்துவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், சில விவரமான பத்திரிகையாளர்களும். ஒரு படம் ஓட வேண்டும் என்று நினைப்பதுதான் அந்த தொழில் சார்ந்த அத்தனை பேரின் ஆசையாகவும் இருக்க முடியும்.
அப்படி இல்லாத சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்துவிட்டாலே போதும். யாருக்கும் உறுத்தாது. ஆனால், இது கமர்ஷியல் ஹிட் என்று பொய்யாக கேக் வெட்டுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள்.
பதினாறு கோடிக்கு மோகன் நடராஜனிடமிருந்து வாங்கப்பட்ட இந்த 'சுட்ட'ப்பழம், ரிலீஸ் செலவான மேலும் இரண்டு கோடியை சேர்த்து பதினெட்டு கோடியாகிறது. படம் அந்தளவு வசூலை குவித்ததா என்றால் அதுதான் இல்லை என்கிறார்கள் வியாபார தரப்பில்.
இதற்கு சென்னையிலிருக்கும் ஒரு தியேட்டரையே உதாரணமாக காட்டுகிறார்கள் அவர்கள். தேவி கருமாரி என்ற தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று வார கலெக்ஷனே சுமார் ஐந்தரை லட்சம்தானாம். ஆனால் இதே தியேட்டரில் தற்போது திரையிடப்பட்டிருக்கும் காஞ்சனா படத்தின் ஒருவார கலெக்ஷனே நாலரை கோடி! ஹிட் என்றால் அது இப்படிதானே இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அதை ஹிட் என்று கொண்டாடுவோனேன்?
இதே மாதிரிதான் எல்லா ஏரியாவின் வசூல் நிலவரங்களும் இருக்கிறதாம். கிட்டதட்ட ஏழரை கோடியாவது படத்தை வாங்கிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள் திரையுலகில். இது ஒரு புறம் இருக்க, தெய்வ திருமகளுக்கு சர்வதேச விருதுகள் கிடைக்கும் என்ற பொய்யான தகவலையும் அவிழ்த்துவிடுகிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள். உண்மையில் இது ஐ யம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பி. இதை எந்த முகத்தோடு பட விழாக்களுக்கு அனுப்ப முடியும் இவர்களால்?
சரி படம்தான் இப்படி காப்பி என்றால் படத்தில் வரும் இசையாவது ஒரிஜனலாக இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு அதைவிட பேரதிர்ச்சி.
ஜி.வி.பிரகாஷின் இசையை கேட்டு இன்புற்றவர்கள், அப்படி பாராட்டிய நாக்கை உப்பு தண்ணீரை விட்டு அலசினாலும் தப்பில்லை. அவ்வளவும் காப்பி! பா பா பாப்பா என்ற பாடலின் ட்யூன் பற்றிதான் இப்படி புழுங்குகிறது விவரமறிந்தவர்கள் ஏரியா. எழுபத்து மூன்றாம் வருடம் வந்த டிஸ்னி வெர்ஷன்தான் அது. இந்த ட்யூனுக்கு சொந்தக்காரர் ரோஜர் மில்லர். இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான ஜெகடதோம்... அமன் அண்டு அயன் அலிகான் இசையில் வெளிவந்த ட்ரூத் ஆல்பத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷிடம் விளக்கம் கேட்டால், டைரக்டர்தான் இதை கொடுத்து அப்படியே போட்டுத்தர சொன்னார் என்கிறார் அவர். நல்லா காமெடி பண்றர்ங்க எல்லாருமா சேர்ந்து...
சுட்ட ORIGINAL
GV சுட்டு போட்ட SONG

No comments:
Post a Comment