[ திங்கட்கிழமை, 22 ஓகஸ்ட் 2011, 01:41.37 PM GMT ]
கனடிய மத்திய அரசியலில் தாக்கம் நிறைந்தவராகவும் தற்போதைய பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்த தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவருமான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் புற்றுநோய் காரணமாக இன்று காலை 4.45 மணியளவில் காலமானர்.
புற்றுநோய் தாக்கம் காரணமான தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து கடந்த மாதம் 25ம் திகதி தற்காலிகமாக விலகிக் கொண்ட இவர் பூரண குணமடைய வேண்டும் என தமிழர்கள் சார்பாக கனடியத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புக்கள் பிரார்த்தனை வேண்டுகோள்களை விடுத்திருந்தன.
கனடியத் தமிழர்கள் தமது நாட்டில் அடக்கப்பட்டவர்கள் அவர்கள் கனடாவில் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ முடியாது அவர்கள் தமது விருப்பு வெறுப்புக்களை கனடிய அரசியலில் தெரிவிக்க வழி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேரடியாகவே தெரிவித்து வந்த ஒரு தூய்மையான அரசியற் தலைவர் இவர்.
ஒரு சாதாரண மனிதனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜக் லெய்டன் கணிதத்துறைப் பேராசிரியராக தனது ஆரம்பித்து பின்னர் ரொறன்ரோ மாநகரசபை அங்கத்துவராக அரசியலிற்குள் புகுந்து கொண்டார்.
அதிலிருந்து நேரடியாகவே மத்திய அரசியலிற்கு சென்ற அவர் புதிய ஜனநாயகக் கட்சியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக்குமளவிற்கு மிகவும் திறம்படச் செயற்பட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களிற்கான விசாரணை தேவையென்பதை கட்சியின் சார்பில் வலியுறுத்தியதோடு கனடா நேரடியாக யுத்தக் குற்றவிசாரணை விடயங்களில் ஈடுபட வேண்டுமெனவும் திர்மாணம் நிறைவேற்றினார்.
இடதுசாரித்துவக் கொள்கைளின் பிடிப்பில் அரசியல் வாழ்வை ஆரம்பித்து கனடியப் பாராளுமன்ற வரலாற்றிலேயே மிகத் திறமையான தலைவராக பரிணமித்த ஜக் லெய்டனின் கட்சியில் தான் கனடியத் தமிழர்களின் முதற் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் தெரிவு செய்யப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment