Tuesday, June 7, 2011

ஜெயலலிதா வீட்டிற்கு படை எடுக்கும் நடிகர்கள் !

05 June, 2011 by admin
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, நடிகர் கமல்ஹாசன் குடும்பத்தினர் மற்றும் நடிகர் பிரபு, விஜய் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் கமல், பிரபு, விஜய், துஷ்யந்த், வி.எஸ். ராகவன், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகைகள் கெளதமி, சுகுமாரி, சச்சு, ராஜஸ்ரீ, காஞ்சனா, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி உட்பட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இவ்வாறு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

மூன்றாவது முறை முதல்வராக பதவி ஏற்றதற்கும், பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதற்கும் அவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். திரையுலகினர் நேரில் வந்து சந்தித்துப் பாராட்டியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.









No comments:

Post a Comment