Wednesday, March 21, 2018

உணர்ச்சிவசப்படுபவர்களை ஆய்வு என்ன சொல்லுகின்றது தெரியுமா? இதில் நீங்கள் யார்? விரைவாக பகிருங்கள்


மனிதராக பிறந்த நாம் அனைவரும் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். “என்னடா இவன் உணர்ச்சி வசப்பட்டு இப்படி ஒரு தப்பான முடிவு எடுத்துட்டான்” கொஞ்சம் யோசித்திருக்கலாம் என பலர் சொல்வதை கேள்விபட்டிருப்போம். ஏன் நாமும் கூட சில நேரங்களில் அப்படிதான் நடந்துக்கொள்வோம்.
நாம் செய்யாத தவறை யாராவது சொல்லிவிட்டால் போதும் வரும் பாருங்க கோபம், கொஞ்சம் கூட யோசிக்காமல் கத்திவிடுவோம்.
ஆனால் நாம் அப்படி செய்வது சரியா. உளவியல் ரீதியாக அதை தவறு என்று சொல்கிறார்கள். எதையும் சில நிமிடம் அமைதியாக இருந்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
உணர்ச்சிவசப்படுவர்களை பக்குவமடையாதவர்கள் என உளவியல் கருத்து தெரிவிக்கிறது. பக்குமடையாதவர்கள் எந்த மாதிரி செயல்படுவார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
பிரபலமாக இருக்க வேண்டும்
தாழ்வுமனபான்மை இவர்களிடத்தில் அதிகம் இருக்கும், பலர் மத்தியில் தான் ஒரு பிரபலமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
அனைவரும் தன்னை விரும்ப வேண்டம் எனவும் உடுத்தும் உடையில் அதிக கவனம் எடுப்பார்கள். விழாக்களில் அனைவரையும் கவருவதற்கு அதிகம் முயற்சி எடுப்பார்கள்.

தோற்றத்தை குறித்த சந்தேம்
தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக விரும்பிய உணவை கூட உண்ணாமல் தவிர்த்து போடுவார்கள். தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுகொண்டிருப்பார்கள். தன்னை விட மற்றவர்கள் அழகாக உள்ளதாக நினைத்துக்கொண்டு கவலைப்படுவார்கள்.

பிறரின் கருத்தை சுமந்தி திரிவார்கள்
தனக்கு இந்த உடை அழகாக இருக்கிறதா என்பதை விட இந்த உடை உடுத்தினால் பிறர் நம்மை குறித்து என்ன நினைபார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

மறுத்து பேசுவார்
யார் எது சொன்னாலும் அதை மறுத்து பேசுவார்கள். மற்றவரின் கருத்திற்கு மதிப்பு தர அவர் மனம் மறுக்கும். தனது கருத்தை அங்கீகரிக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் எடுப்பார்கள்.

அதிக எதிர்பார்ப்புகள்
தன்னை அனைவரும் கவனித்துக்கொண்டிருப்பதாக நினைப்பார்கள். தன்னை குறித்து அதிக எதிர்பார்ப்புகள் வைத்திருப்பர். ஒரு தவறு செய்துவிட்டாலும் அதில் இருந்து சீக்கிரம் வெளியில் வராமல், தன்னை குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் சிக்கி தவிப்பார்கள்.

பொறாமை
பிறரிடம் பொறாமை இல்லாதது போன்று காட்டிக்கொண்டாலும் அதிக பொறாமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

குறைத்து மதிப்பிடுதல்
ஒரு பிரச்சிணையில் மாட்டிக்கொண்டால் யார் என்ன சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். தனது பிரச்சணை மட்டுமே பெரிதென நினைப்பார்கள். சமாதானம் சொல்பவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்.

கருத்தை நம்பி வாழ்வார்கள்
எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்கமாட்டார்கள். ஒரு முடிவு எடுப்பதில் அதிகம் சிரமப்படுவார்கள், பாதுகாப்பற்ற பதட்டத்துடன் காணப்படுவார்கள். முக்கியமாக முடிவுகளை தனது மனசாட்சயை கேட்டு எடுக்க மாட்டார்கள். பிறரின் உதவுடன் அடுத்தவரின் முடிவை பின்பற்றுவார்கள்.

மற்றவரை சார்ந்து இருப்பார்கள்
எந்த ஒரு விடயத்திலும் தனியாக இருக்க மாட்டார்கள். சாலையை கடந்து செல்லும் போதும், காதல் விவகாரம் என எல்லவற்றுக்கும் மற்றவர்கள் சார்ந்து இருப்பார்கள்.
Confidence = emotional balanceThe lack of self-confidence can be noticed in even the smallest things
வாழ்வில் தன்னம்பிக்கை என்பது மிகவும் முன்னியமான ஒன்றாகும்


http://www.manithan.com/lifestyle/04/165808?ref=ls_d_manithan

No comments:

Post a Comment