Thursday, February 22, 2018

பிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


'Beast from the East' என்று அழைக்கப்படும் கடுங்குளிர் காற்றுகள் சைபீரியாவிலிருந்து வீச இருப்பதால் பிரித்தானியா வரும் வாரத்தில் கடும் குளிரை எதிர்கொள்ள நேரிடலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் ஞாயிறு இரவில் ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -10C (14F)க்கு குறையும், தென் பிரித்தானியா உட்பட பல பகுதிகளில் பனிப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதத்தின் முதல் பாதி வரைக்கும் இந்த கடுங்குளிர் நீடிக்கலாம், இதனால் லண்டனிலும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த திங்கட்கிழமை பகல் நேர வெப்பநிலை -4C (25F)வரை குறையலாம். இந்த குளிருக்கு 'sudden stratospheric warming' என்னும் வானிலை நிகழ்வு காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த வானிலை நிகழ்வினால் பூமிக்கு பல மைல்கள் தொலைவிலுள்ள காற்றோட்டம் பாதிக்கப்பட்டு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து குளிர் காற்றுகள் பிரித்தானியாவை வந்து தாக்கும்.
கடந்த திங்கட்கிழமைதான் இந்த மாதத்தின் அதிக வெப்பநிலை உள்ள நாளாக அமைந்தது.
Cardiffஇல் வெப்பநிலை 14.2C (58F)ஆக பதிவாகியிருந்தது. இன்றைய பகல் நேர வெப்பநிலை (வியாழன்) 7C (45F) ஆகவும், வெள்ளிக்கிழமை 6C (43F) சனிக்கிழமை 7C (45F)ஆகவும் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை பகல் நேர வெப்பநிலை 5C (41F) ஆகவும் திங்கட்கிழமை 4C (39F)ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Public Health England's extreme events team அமைப்பைச் சேர்ந்த Dr Thomas Waite, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் குளிர் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சில நேரங்களில் அது மரணத்திற்கு கூட வழி வகுக்கலாம் என்பதை மறந்து விட வேண்டாம்.
எனவே மக்கள், அக்கம் பக்கத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ளவும்.
வீட்டினுள் வெப்பநிலை குறைந்தபட்சம் 18C இருக்குமளவில் ஹீட்டர்களைப் பயன்படுத்தி சூடாக்கிக்கொள்ளவும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


http://news.lankasri.com/uk/03/172502?ref=ls_d_uk

No comments:

Post a Comment