Thursday, December 21, 2017

இதை 6 முறைகள் காலையில் செய்து பாருங்கள்: பலன்கள் இதோ


சிலருக்கு முதுகு பகுதியை வளைத்தால் கடுமையான வலி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் சக்கரவாகாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு பகுதியின் வலிமை அதிகரிக்கும்.
சக்கரவாகாசனம் செய்வது எப்படி?
கால் முட்டிகளுக்கு இடையில் சிறிய இடைவெளி வைத்து முட்டி போட்டு கொண்டு, உடலை முன்புறமாகக் கொண்டு சென்று, கைகளை நீட்டி, தலையைத் தளர்வாக, வயிறு அமுங்கி இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மேல் நோக்கி முன் கொண்டு சென்று, கைகள் தோள்பட்டை அளவில் நேராக ஊன்றி இருக்க வேண்டும்.
அந்த நிலையில் இருந்து, ஓரிரு விநாடிகளுக்குப் பின், தலையை முதலில் தாழ்த்தி மூச்சை வெளியேவிட்டபடி வயிறு அமுங்கிய பழைய நிலைக்கு வர வேண்டும்.
அதன் பின் ஓரிரு வினாடிகள் கழித்து முன் பக்கமாக மூச்சை உள்ளிழுத்து விட வேண்டும். இவ்வாறு 6 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்
  • முதுகெலும்பு மற்றும் முதுகுப் பகுதி வலிமை பெறும்.
  • சுவாசம் அதிகரிக்கும்.
  • வயிற்றில் காற்று முழுவதுமாக வெளியேறும்.
  • கீழ் முதுகு மற்றும் கழுத்து பகுதியின் செயல்பாடு சீராகும்.

No comments:

Post a Comment