கலிபோர்னியாவில் ஆப்பிரிக்கா அமெரிக்கர்களுக்கு எதிராக அவ்வப்போது கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்னம் உள்ளது. இந்நிலையில் தெற்கு கலிபோர்னியா, அமெரிக்க குடியுரிமைகள் ஒன்றியம் யூடிப் மூலம் ஒரு வீடியோ வெளியிடப்பட்ட்டுள்ளது இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது.
இந்த வீடியோவில் ஒரு நிறைமாத ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணி சாலை ஓரத்தில் நின்று கொண்டு செல்போன் பேசிகொண்டிருக்கிறார்.அங்கு வந்த கலிபோர்னியா போலீசார் கர்ப்பிணி பெண் என்று கூடபார்காமல் அவளை வலுகட்டாயமாக கைது செய்யும் முயற்சியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.அவர் போலீசாரிடம் என்னை எதற்கு கைது செய்கீற்கள் என்று கேட்டுகிறார் அதற்கு பதில் அளிக்காமல் அந்த நிறைமாத கர்ப்பிணியை கீழே தள்ளி கைது செய்கிறார்கள். அந்த பெண்மணி என்னை விட்டு விடுங்கள் என்று கதறுகிறார். கல்மனம் படைத்த கலிபோர்னியா போலீசார் அவளை வலுக்கட்டாயமாக கைது செய்கிறார்கள். தற்போது இந்த வீடியோ யூடிபில் வெளியிடபட்டுள்ளது. இதற்கு பல சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கார்லினா மைக்கேல் கூக் என்ற கருப்பின பெண்மணி சாலையில் கார் ஓட்டிகொண்டிருக்ம்போது அருகே வந்த அமெரிக்க வாழ்பெண்மணியின் கார் உரசி உள்ளது. இரண்டு பேரும் நடுநோட்டில் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து கார்லினா மைக்கேல் கூக் காரை எடுத்து கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.அமெரிக்க வாழ் பெண்மணி புகார் அளித்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார்லினா மைக்கேல் கூக் கூறுகையில் அமெரிக்க வாழ் பெண்மணி தான் அவளும் அவருடைய மகளும் என்னை மிரட்டினர் என்று கூறியுள்ளார். மேலும் இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.woman arrast