Saturday, February 28, 2015

"ஜிகாதி ஜான்" சகோதரியின் திகிலூட்டும் குறும்படம் அம்பலம் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதி ஜிகாதி ஜானின் இளைய சகோதரி எடுத்த குறும்படம் ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து பல தலைத் துண்டிப்புகளை அரங்கேற்றிய கொடூரன் ஜிகாதி ஜான்.
இதுவரை வெளிநாட்டு பிணைக்கைதிகளை கொன்று, அதை ரசித்து வந்த இந்த காட்டுமிராண்டியை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவனை குறித்து ஊடகங்கள் கூறியதாவது, Mohammed Emwazi என்பது இவனது உண்மையான பெயர் என்றும் பிரித்தானியாவில் Queen’s Park கல்லூரியில் கணனி துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார் எனவும் கூறப்பட்டது.
மேலும் இவனது பள்ளிப்பருவ காலங்களின் புகைப்படங்களுடன், மற்ற சில முக்கிய ஆவணங்களும் வெளியானது.
இந்நிலையில் இவனது இளைய சகோதரி ஒருவர் பிரித்தானியாவில் வசித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் மிடிஸ்செக்ஸ்(Middlesex) பல்கலைக்கழக்கத்தில் ஒளிப்பதிவு பட்டபடிப்பு பயின்று வரும் இவர், "தி கில்லர் பூட்செப்ட்ஸ்" (The killer Footsteps) எனும் குறும்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் எடுத்த இந்த படம் தொடக்கத்தில் சற்று திகிலாக இருந்தாலும், இறுதியில் “பழித்தீர்ப்பது என்பது எதற்கும் ஒரு தீர்வில்லை” என்ற செய்தியுடன் நிறைவடைகின்றது.
இதன்மூலம் இவரது இளகிய நெஞ்சம் புலப்படுகிறது. மேலும் கொடூர செயல்களை செய்து வரும் சகோதரனுக்கு, இப்படி ஒரு சகோதரி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment