Monday, December 29, 2014

9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்!

160 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம்: பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்தது?

0
எயர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹடி முஸ்தப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருவதாக இணைய செய்திகள் தெரிவிக்கின்றன.airasia_flight_001air-asia_1
air-asia_2
air-asia_4
- See more at: http://www.canadamirror.com/canada/35943.html#sthash.YxkbmVm8.dpuf


விமானி பயணப் பாதையை மாற்றியதால் விமானம் காணாமல் போனதா?; எயார் ஏஷியா தொடரும் மர்மம்

0
எயார் ஏஷியாவின் கியூ இஸட் 8501 விமானம் இன்று காலை முதல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகளை இழந்துள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் சிங்கப்பூர், பிரிட்டன், மலேஷியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 6 சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 155 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
ஏனைய அனைத்து பயணிகளும் இந்தோனேஷிய பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது
சீரற்ற காலநிலையால் பயணப்பாதையை விட்டு விலகி வேறொரு பாதையூடாக பயணிப்பதற்கு விமானி அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பின்னரே விமானத்தின் தொடர்புகள் அற்றுப்போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.canadamirror.com/canada/35957.html#sthash.K0M6qAvo.dpbs

மாயமான இந்தோனேஷியா ஏயார் ஏசியா – புதிய தகவல்…

0
ஏயார் பஸ் ஏ 320-200 வகையைச்சார்ந்த இவ் விமானத்தில் 155 பயணிகள் மற்றும் அலுவலகப் பணியாட்கள் 7பேர் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பயணம் செய்தோரில் 149 இந்துனேஷியர்களும், கொரியா நாட்டைச் சேர்ந்த மூவரும்,சிங்கப்பூர்,பிரித்தானியா மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் வீதமும் பயணித்ததாக தவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் 138 வளர்ந்தோரும், 16 பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.
இந்தோனேஷியா நேரப்படி இன்று காலை 7.55மணியளவில் பயணத்தை ஆரம்பித்த விமானத்தின் தொடர்பாடலின் பின்னர் 42 வினாடிகளின் பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான சேவை நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி இந்துனேஷியாவின் கலிமந்தான் மற்றும் ஜாவாத்தீவுகளிற்கிடையே அண்மித்த கடற்பரப்பிலே விமானம் மாயமாகியுள்ளது.விமான நிலையம் தமது துக்கத்தை வெளிப்படுத்த தமது facebookஇல் கருப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது.
fligh
air-asia_1air-asia_2air-asia_4AirAsia
- See more at: http://www.canadamirror.com/canada/36000.html#sthash.Cdq5jSc7.dpuf

9 மாதங்களில் 3 விமானங்களை இழந்த மலேசியா! 699 பேர் பலி!- நிஜத்தின் தேடல்

0
அதன் போது, மலேசியன் எயர்லைன்ஸின் இரண்டு போயிங் 777 விமான இழப்புக்களைப் போல இந்த விமான விபத்தும் மலேசியாவுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
இது ஒரு அசாதாரண நிகழ்ச்சி. இந்த வருடமே 21ம் நூற்றாண்டில் விமான விபத்துக்களில் அதிகம் பேர் கொல்லப்பட்ட ஆண்டு.
சீரற்ற காலநிலை அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது. இடிமின்னலுடன் கூடிய மழைக்கான கால நிலை அது. தனது சாதாரணப் பறப்பு உயரான 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து மேலும் 6000 அடி தூரம் மேலே உயர்ந்து பறக்க விமானி அனுமதியைக் கோரியிருக்கிறார்.
இந்தோனேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பறப்புத் தூரம் 5,700 கிலோ மீற்றர்கள் இந்தத் தூரத்தையடைவதற்குத் தேவையானதை விட மேலதிகமாக மூன்று மணித்தியாலங்கள் பறப்பதற்கான எரிபொருளையும் அது கொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் இருந்து ஆபத்தை உணர்த்தும் மே டே என்கிற அபாய அழைப்போ அல்லது பான் பான் என்ற அழைப்போ பயணப் பாதையை மாற்றி உடனே வேறோர் விமான நிலையத்தில் தரையிறக்கும் அழைப்போ கிடைக்கப் பெறவில்லை என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
- See more at: http://www.canadamirror.com/canada/36009.html#sthash.HQdXNHGn.dpuf

No comments:

Post a Comment