Tuesday, October 28, 2014

வண்ணப்பட்டுடன் தீபாவளி கொண்டாடிய இங்கிலாந்து தேவதை (வீடியோ இணைப்பு)!

பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கேமரூனின் மனைவி புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கடந்த வாரம் உலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை, பிரித்தானியாவிலும் 5 நாட்கள் கொண்டாடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டரில்(Westminster) நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா(Samantha Age-43) கேமரூனுடன் கலந்து கொண்டுள்ளார்.
ராயல் புளு நிறமும், தங்க ஜரிகையும் கொண்ட புடவையை உடுத்தி கேமரூனுடன் வந்த சமந்தா, மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதன்பின் தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் கேமரூன், நாட்டில் உள்ள 8 மில்லியன் இந்துக்களுக்கு தீபாவளி உரையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment