Tuesday, September 23, 2014

என்கவுன்டருக்கும் வந்தது சிக்கல் ; ரவுடிகளுக்கு லாபம் தரும் உத்தரவு வந்துள்ளது ?

புதுடில்லி:
தாதாக்கள், கொடூர குற்றவாளிகள் ஆகியோரை காப்பாற்றிக்கொள்ளும் விதமாக என்கவுன்டர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி வழிகாட்டுதல் முறையை அறிவித்துள்ளது. இதனால் போலீசாருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தவுடன் போட்டுத்தள்ள முடியாது. நாட்டில் பயங்கரவாதிகள், கொடூர கிரிமினல் குற்றம் புரிந்தவர்கள், சூழ்நிலை காரணமாக போலீசார் என்கவுன்டரில் சாய்த்து விடும் நிலை எப்போதாவது ஏற்படுவது உண்டு. இது மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெறும். பாவி போய்ட்டான் என்று ஒருபுறமும், மேலும் பதுங்கி இருந்த படுபாதக செயலை முடிக்க திட்டம் போட்டு வரும் கிரிமினல்களுக்கும் கிலியை ஏற்படுத்தும்.
ரவுடிகள் சுட்டுக்கொலை, என்ற பெயரில் வரும் செய்திகளும், ரத்தச்சுவடுகளும் நாட்டில் ஒரு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் சில நேரங்களில் போலி என்கவுன்டர் நடந்ததாகவும் புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் என்கவுன்டருக்கு கவுன்டர் கொடுக்கும் விஷயமாக இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என 1999ல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் , அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதில் மும்பையில் பல என்கவுன்டர்கள் நடந்து வந்ததாகவும், இதில் போலியாக நடந்தது என்று மனுதாரர் கூறியுள்ளார். போலியானது என்ற சந்தேகம் வந்தால் என்கவுன்டர் தொடர்பான சம்பவத்தை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரி சுட்டது தற்காப்புக்கு நடந்ததா என்பதை நிரூபணம் செய்ய வேண்டும். போலியாக நடந்த என்கவுன்டர் என்ற சர்ச்சை வரும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல் என்பது உடனடியாக இருக்க கூடாது. துப்பாக்கிகள் இந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணை அவசியமானது. சி.ஐ.டி., போலீசாரால் விசாரிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் போலி என்கவுன்டர் என்று உறுதியான ஆதாரங்கள் தெரிந்தால் மட்டுமே மனிதஉரிமை கமிஷன் இதில் தலையிட வேண்டும். இல்லாத பட்சத்தில் தலையீடு தவிர்க்க வேண்டும்.
போலி என்கவுன்டர் என ஒருவர் பாதிக்கப்பட்டால் இவரது குடும்பத்தினர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment