Monday, June 23, 2014

MH 370 மலேசிய விமானத்தின் விடையத்தில் முக்கிய திருப்பம்: கம்பியூட்டரில் அழிக்கப்பட்ட பைஃல்கள் மீட்ப்பு !


சில மாதங்களுக்கு முன்னர் பறப்பில் ஈடுபட்ட மலேசிய விமானம், நடுவானில் வைத்து காணமல் போனது. இவ்விமானத்திற்கு இதுவரை என்ன நடந்தது என்று எவராலும் திட்டவட்டமாக கூற முடியவில்லை. இன் நிலையில், குறித்த MH 370 விமானத்தில் இருந்த அனைவரது ரக்கார்டுகளையும் பொலிசார் ஆராய்ந்துவிட்டார்கள். அவர்களில் எவரும் கிருமினல் அல்ல. இதேவேளை MH 370 விமானத்தை செலுத்திய 53 வயதான விமானி ஷாகீர் அகமட் தனது வீட்டில், விமானத்தை செலுத்திப்பார்க்கும் கம்பியூட்டர் கருவி ஒன்றை வைத்திருந்துள்ளார். இதனை ஆங்கிலத்தில் ஸ்ரிமிலேட்டர்( flight simulator ) என்று கூறுவார்கள். ஒரு விமானத்தை எப்படி வானில் செலுத்துவது, பின்னர் எவ்வாறு இறக்குவது என்பது தொடர்பாக இதில் பயிற்சியை நீங்கள் எடுக்கலாம்.
குறித்த இந்த கருவியை வைத்து சுமார் 170 தடவைகள் அவர் ஒத்திகை பார்த்துள்ளார் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு அனுபவம் மிக்க விமானி, சமீபத்தில் ஏன் இவ்வாறு செய்யவேண்டும் ? அதாவது புதிதாக வேலையில் இணையும் விமானிகளே இவ்வாறு கம்பியூட்டரில் ஒத்திகை பார்த்து தமது திறனை வளர்த்துக்கொள்வார்கள். ஷாகீரை பொறுத்தவரை இந்தப் பயிற்சி தேவையில்லை. ஆனால் ஷாகீர் என்ன செய்துள்ளார் என்றால், மிகச் சிறிய ஓடுபாதையில் விமானத்தை எவ்வாறு இறக்குவது என்று பயிற்சி எடுத்துள்ளார். குறிப்பாக இவர் செலுத்தும் விமானம் பாரிய விமானம் ஆகும். அது சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, அதன் ஓடு தளம் மிகவும் விசாலமாக இருக்கும். ஆனால் ஷாகீர் தெற்காசிய நாடு ஒன்றில் உள்ள சிறுய விமான ஓடு பாதை ஒன்றில் விமானத்தை இறக்குவது எப்படி என்று தனது வீட்டுக் கம்பியூட்டரில் பயிற்சி எடுத்துள்ளார்.
பயிற்சி எடுத்தது மட்டும் அல்ல அந்த பைஃல்களை அழித்தும் விட்டார். ஆனால் அமெரிக்க FBI உதவியுடன் மலேசியப் பொலிசார் அழிக்கப்பட்ட அந்த பைஃல்களை தற்போது ஒவ்வொன்றாக மீட்டு வருகிறார்கள். இதனூடாக சில துப்புக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய சூழ் நிலையில், இந்த விமானம் காணாமல் போனதற்கு ஷாகீரே உடந்தை என்று பொலிசார் திட்டவட்டமாக நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment