Thursday, June 26, 2014

கற்பழிக்க தயாராகுங்கள்: BBC அறிக்கை வெளியானதால் ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ந்து போனார்கள் !

நேற்றைய தினம்(25) BBC சர்வதேச தொலைக்காட்சியில், கற்பழிக்க தயாராகுங்கள் என்ற வாசகம் ஓடவிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலர் ஆடிப்போனார்கள். இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற செய்தி ஒளிபரப்பு முடிந்தபின்னர், வானிலை அறிக்கை காண்பிக்கப்பட்டது. அதில் காஸ்டன்பெரி என்னும் இடத்தில் காணிவேல் ஒன்று நடப்பதால் அங்கே செல்லும் நபர்கள் கற்பழித்த தயாராகுங்கள் என்று கீழே எழுத்துக்கள் ஓட ஆரம்பித்தது. இதனை அவதானித்த பலர் BBC க்கு தொலைபேசி அழைப்பை விடுத்து, நீங்கள் பிழையாக எழுத்துகளை ஓடவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் BBC அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும் பலர் தமது ரிவீட்டரில், குறித்த படத்தை போட்டு BBC யை போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்களாம்.

இதனால் தற்போது BBC தொலைக்காட்சி நேயர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. "RAIN" என்ற சொல்லுக்கு பதிலாக தாம் "RAPE" என்ற சொல்லை போட்டுவிடோம் என்று BBC தொலைக்காட்சிப் பிரிவினர் தற்போது கூறியுள்ளார்கள். அதாவது காஸ்டன்பெரி என்னும் இடத்தில் விழா நடைபெறுகிறது அங்கே செல்பவர்கள் மழைக்கு தயாராக செல்லுங்கள் என்பது தான் உண்மையான அறிவித்தால். ஆனால் ஒரு சொல்லு மாறியதால், அதன் முழு அர்த்தமும் மாறிப்போய்விட்டது. இதற்கு பொறுப்பாக இருந்த அந்த நபரின் தலை நிச்சயம் உருளும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை எனலாம்.
http://www.athirvu.com/newsdetail/269.html

No comments:

Post a Comment