Friday, April 18, 2014

கட்டு விரியன் பாம்பும் ஒரு பூரானும்: நிச்சயம் தமிழர்கள் பார்கவேண்டிய ஒன்று !





உருவத்தில் பெரிது என்றால் எதனையும் செய்துவிட முடியும் என்று சிலர் நினைப்பது உண்டு. அதேபோல பெரிய அல்லது பாரிய இனத்தவர்களும் சிறுபாண்மை இனத்தவர்களை பூச்சி நசுக்குவதுபோல நசுக்குகிறார்கள் என்று கூட நாம் பேசிக்கொள்வது உண்டு. ஆனால் இங்கே நடந்திருக்கும் விவகாரமே தனி ! மசடோனியா நாட்டில் உள்ள பூங்கா ஒன்றில், ஆராட்சியாள்கள் பார்த்த ஒரு விடையம் அவர்களை அதிரவைத்துள்ளது. கட்டு விரியன் பாம்பு ஒன்று, பூரான் ஒன்றை அப்படியே லாவகமாக விழுங்கியுள்ளது. (பாம்பு தனது இரையை விழுங்கும்போது சப்பிச் சாப்பிட்டு விழுங்குவது இல்லை. அப்படியே முழுதாக விழுங்கும் பழக்கம் உள்ளது). இருப்பினும் பூரான் இறந்துவிடவில்லை.

வயிற்றுக்குள் சென்ற பூரான் அப்படியே இறந்துவிடவும் இல்லை. தன் உயிரை எப்படியாவது காப்பாற்றியாகவேண்டும் என்று அதுபோராடியுள்ளது. பாம்பின் வயிற்றை உள்ளே இருந்து துளைக்க அது ஆரம்பித்துள்ளது. பாம்பு பூரானை இரையாக விழுங்க, பூரான் பாம்பின் அடி வயிற்றை தனது இரையாக மாற்றிக்கொண்டு, அதனை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக்கொண்டு சிறிய ஓட்டை ஒன்றை போட்டுவிட்டது. இதனால் அது சுவாசிக்கவும் ஆரம்பித்துவிட்டது. விழுங்கிய பூரானை வெளியே எடுக்கவும் முடியாமல், வயிற்றில் இருந்துகொண்டு அது செய்யும் அட்டகாசத்தை தாங்கவும் முடியாமல் கட்டு விரியன் பாம்பு துடிதுடித்துள்ளது. இறுதியில் வால் பகுதி பிய்ந்துபோகும் அளவுக்கு பூரான் தனது வேலையைக் காட்டியுள்ளது.

இதனால் பாம்பு துடிதுடித்து இறந்துள்ளது. வெளியே வர கடும் முயற்சிசெய்த பூரான் பாம்பின் வயிற்றில் சுரக்கும் அமிலப் பதார்த்தம் காரணமாக , பின்னர் இறந்துவிட்டது. இருப்பினும் தான் இறப்பதற்கு முன்னதாகவே பாம்பையும் பழிவாங்கிவிட்டது. ஈழத் தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு நல்ல உதாரணம் ஆகும். என்ன தான் சிங்களம் பெரிய ஒரு உருவமாக இருக்கலாம். அது எங்களை விழுங்கிவிட்டதாக கூட நாம் நினைக்கலாம். ஆனால் முயற்சி இருந்தால், நல்ல மூளை இருந்தால் எதனையும் துளைத்து, நாம் வெளியே வந்துவிட முடியும். எமது தேசிய தலைவர் அடிக்கடி கூறுவதுபோல "துன்பத்தை தந்தவனுக்கே அதனை திருப்பிக்கொடு" என்பது போல நாம் இருப்பதே அழகாகும்.

No comments:

Post a Comment