Monday, March 24, 2014

தொலைந்த மலேசிய விமானத்திற்கு முடிவு கிடைத்ததா ? பிரெஞ்சு சட்டலைட் புகைப்படம் !

கடந்த 8ம் திகதி நடுவானில் வைத்து காணாமல்போன மலேசிய விமானத்தை இன்றுவரை தேடிவருகிறார்கள். அதன் பாகங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன் நிலையில் பிரான்ஸ் நாட்டு உளவு சட்டலைட் நிறுவனம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் காலை எடுக்கப்பட்ட அப்புகைப்படத்தில், விமானத்தின் பாகங்கள் காணப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் தான் விமானம் ஒன்றின் எச்சங்கள் காணப்படுவதாக பிரான்ஸ் தற்போது தெரிவித்துள்ளது. இப் புகைப்படங்களை பிரான்ஸ் நாடு, மலேசியாவுக்கு வழங்கியுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.

குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளது, தமது விமானம் தானா என்பதனை மலேசியா உறுதிசெய்யவேண்டும் எனவும் அது கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை விமானத்தின் தடத்தை கண்டறிய உதவும் கருவி, விமானம் பாதிப்புக்கு உள்ளானால் , சுமார் 30 நாட்களுக்கு மட்டுமே சமிஞ்சைகளை அனுப்ப வல்லது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே 30 நாட்களில் விமானத்தை கண்டுபிடிக்கவேண்டும் எனவும், அப்படி இல்லை என்றால், விமானத்தில் இருந்து வரும் சிக்னல் முற்றாக நின்றுவிடும் என்றும் அவர்கள் மேலும் எச்சரித்துள்ளார்கள். குறித்த இந்த மலேசிய விமானத்தை தேடும் காட்சிகளும் மற்றும் அதன் பாகங்கள் எனச் சந்தேகப்படும் புகைப்படங்களையும் பார்க இங்கே அழுத்துங்கள்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6572
http://uttv.tv/14.php

No comments:

Post a Comment