Saturday, August 17, 2013

தலைவெட்டிய பாம்பால் ஆபத்து !

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். உண்மையில் இது சரிதான் போல இருக்கு. உலகில் உள்ள பல உயிரினங்களின் தலையை வெட்டினால் அவை நொடிப் பொழுதில் இறந்துவிடும். இல்லை என்றால் செயல் இழந்து துடிக்கும். பின்னர் அசைவற்றுப் போகும். ஆனால் பாம்பு சற்று வித்தியாசமான இனம் போல இருக்கிறது. காரணம் என்னவென்றால், ஒரு மனிதர் சற்று வித்தியாசமாக யோசித்து ஒரு செயலைச் செய்துள்ளார். அவர் விஷப் பாம்பு ஒன்றைப் பிடித்து, அதன் தலையை வெட்டியுள்ளார். முண்டமான அப் பாம்பின் உடல் பல நிமிடத்துக்கு அசைகிறது. அது எவ்வாறு அசைகிறது என்று அவர் படம்பிடித்துக்காட்டிக்கொண்டு இருக்கும் வேளை திடீரென மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது வெட்டப்பட்ட பாம்பின் உடல் துடித்துக்கொண்டு இருக்க, அதன் வால் பகுதி தெரியாமல் பாம்பின் தலையுடன் மோதிக்கொள்கிறது. உடனே வெட்டப்பட்ட பாம்பின் தலை அப்படியே வாலைக் கடிக்கிறது. அதன் பற்களில் இருந்து வெள்ளை நிறத்தில் நஞ்சு ஊறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதாவது தனது வாலையே அப் பாம்பு கடிக்கிறது. இவை சுமார் 2 நிமிட நேரம் வரை நீடிக்கிறது. அப்படி என்றால், நீங்கள் ஒரு பாம்பை கண்டு அதனை அடித்தால் கூட, மற்றும் கொன்றுவிட்டோம் என்று நினைத்தால் கூட அது கூட மிகவும் ஆபத்தான் விடையம் தான். அதன் வாய்க்கு அருகே உங்கள் கைகளை கொண்டு சென்றால் அது நிச்சயம் கடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வீடியோவைப் பாருங்கள் பாம்பால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்று தெரியும். (யூ ரியூப் வீடியோ இது) சிலவேளைகளில் நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவரா என்று கேட்க்கும். ஏன் எனில் இக் காட்சிகள் கோரமானவை.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5497

No comments:

Post a Comment