Friday, October 5, 2012

Windows 7ல் தேடப்படும் தகவல்களை சேமித்து வைத்திட !!


சிலர் தங்கள் கணனியில் பெரும்பாலும் ஒரே மாதிரியான தேடல்களை மேற்கொள்வார்கள்.
இவர்கள் ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை Type செய்திடாமல், தேடல் சொற்களை பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று கிளிக் செய்து தேடும் வசதி Windows 7 இயங்குதளத்தில் உள்ளது.
இதனை செயல்படுத்துவதற்கு,
முதலில் Windows Explorer-ஐ திறக்கவும்.
இதற்கு Start -> Computer எனச் செல்லலாம் அல்லது Windows Explorer என Start Button மேலாக உள்ள Search Box பாக்ஸில் Type செய்திடலாம்.
Windows Explorer விண்டோ ஓபன் ஆனதும், அதன் மேல் வலது பக்கத்தில் ஒரு கட்டம் இருப்பதனைக் காணலாம். இங்கு நீங்கள் தேட விரும்பும் வகைக்கான சொல்லை Type செய்திடலாம்.
எடுத்துக்காட்டாக jpeg என Type செய்தால், கணனியில் உள்ள அனைத்து jpeg கோப்புகளும் காட்டப்படும்.
நீங்கள் கொடுத்த சொல்லுக்கான தகவல்கள் மேலே கிடைத்தவுடன், Save search பட்டனைக் கிளிக் செய்திடவும். இது Windows Explorer விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.
இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நீங்கள் Save செய்திடலாம்.
இப்போது Windows Explorer இடது பக்கத்தில் உள்ள பிரிவில், உங்கள் தேடல் பதியப்பட்டு கிடைக்கும். இதனை எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து தேடலை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment