Monday, January 30, 2012

நீங்கள் எப்படிப்பட்டவர்?


நீங்கள் எப்படிப்பட்டவர்?

ஒரு இளம்பெண்ணிடம் தன் மனதைப் பறி கொடுக்கிறான் இளைஞன். அவளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அவளும் அவனிடம் ஏதோ ஒரு  நல்ல விஷயம் உள்ளது என்பதை அறிந்து ....அதைக் காண சம்மதித்து, அவனது உறவை ஏற்றுக் கொள்கிறாள். வேலையில் சேர விண்ணப்பித்தவரிடம் உள்ள நல்ல பக்கத்தைப் பார்க்கும் போது நிறுவனத்தார், அவரை வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர்.அதே போல் அந்த நிறுவனத்தாரிடம் உள்ள நல்ல விஷயங்களைக் காணும் அவரும், அந்த நிறுவனத்தில் வேலையில் சேர முடிவெடுக்கிறார். எனவே எல்லா உறவுகளுமே இப்படித்தான். நல்ல பழக்கங்களையே சார்ந்துள்ளன. நல்ல விஷயங்களே தந்து நல்லவற்றையே காணச் செய்வது தான் வெற்றிகரமான உறவுகள். சிலர் கெட்ட விஷயமே எது என்று தெரியாவிட்டால், எப்படி அதைப் பற்றி தெரிந்து கொள்வது என்று கேள்வியை எழுப்பலாம். அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் தான். எல்லாவற்றிலும் நீங்கள் உங்களுக்கு மற்றவர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் மற்றவருக்குச் செய்யுங்கள்.

நம்மிடம் நல்ல குணம் இருப்பதால் தான் நாம் சேவை செய்கிறோம். அதே போல் மற்றவர்களிடமும் நல்ல குணங்கள் இருப்பதால் தான் நாம் சேவை செய்வதற்கான ஊக்கத்தைப் பெறுகிறோம். சேவையும், நல்ல குணங்களும் இரண்டும் நெருக்கமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

வார்த்தைகளில் நன்மை,  நம்பிக்கையை உருவாக்குகிறது. சிந்தனைகளில் நன்மை,  ஆழத்தை உருவாக்குகிறது. சேவையில் நன்மை அன்பை உருவாக்குகிறது என்கிறார், லாவோட்சே.

நாம் அனுமதித்தால் போதும். மனித ஆத்மா உன்னதத்தை அடைந்து விடும்.  நமக்குப் பின்விளைவுகள் இல்லாதபோது மற்றவர்களுடைய துன்பங்களை நீக்குவதில் கஷ்டமே இல்லை. அந்தத் துன்பங்களைக் கண்டு பரிதாபப்பட்டு பணத்தாலும், உடல் உழைப்பாலும் நாம் உதவி செய்கிறோம். ஆனால், நமக்குப் பின் விளைவுகள் வந்தால், நமது மனோபாவம் மாறிவிடும். நமது உதவிக்கு நன்றி கிடைக்காவிட்டால் கூட நாம் வருத்தப்படுவோம். நமக்குத் தீங்கு செய்தவர்களுக்கு நாம் நன்மை செய்வது அதைவிடக் கடினமானது.
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை கீழ்கண்ட கேள்விகளில் இருந்து நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் கடைபிடித்து வருகிறேன்.
தீய, பலவீனமான விஷயங்களில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்.
என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.
இந்தக் கேள்விகளை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம்.

மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே மிக உயர்ந்த குணமாகி விடும்.

No comments:

Post a Comment