Friday, June 1, 2018

பிரான்ஸ் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கான ஆறு கட்டளைகள்!

மதச்சார்பின்மையை உறுதி செய்வதற்காக பிரான்ஸ் பள்ளிகளில் பின்பற்றப்படவேண்டிய புதிய விதி முறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. அவற்றில் ஆறு முக்கிய விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  1. மதத்தின் அடிப்படையில் ஒரு மாணவி நீந்த முடியாது எனக் கூறி மருத்துவச் சான்றிதழை அளித்தாலும் பள்ளிகளில் உள்ள மருத்துவர்கள் அவற்றை மறு பார்வை செய்தே அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.
  2. மதக் காரணங்களுக்காக ஒரு ஊழியர் ஒரு பெண்ணுடன் கை குலுக்க மறுத்தால் அவர் தண்டிக்கப்படுவார்.
  3. பாலினக் கல்வி, ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப் பள்ளி வரை கட்டாயமாக்கப்படுகிறது.
  4. பர்தா போன்ற மதம் தொடர்பான அடையாளங்கள் அணிந்திருக்கும் தாய்மார்கள், தங்கள் மதத்தை பிரச்சாரம் செய்யாத வரையில் தங்கள் பிள்ளைகளை வகுப்புகளுக்கு அழைத்துவர அனுமதிக்கப்படுவார்கள்.
  5. மதம் தொடர்பான பர்தா, நீண்ட பாவாடைகள் மற்றும் மதம் தொடர்பான அடையாளங்கள் பள்ளிகளில் தடை செய்யப்படுகின்றன.
  6. ஆராதனைக்காக அல்லாமல் மற்றபடி மதச்சார்பற்ற கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படலாம்.
பிரான்ஸ் பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த விதிமுறைகள் அடங்கிய புத்தகத்தின் ஒரு நகல் வழங்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/france/03/180123?ref=ls_d_france

No comments:

Post a Comment