Tuesday, June 5, 2018

தென்னாப்பிரிக்காவில் விழுந்து வெடித்த விண்கல்: பகீர் வீடியோ காட்சிகள்

தென்னாபிரிக்கா கேப்டவுன் பகுதியில் விண்கல் ஒன்று விழுந்து வெடித்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
2018 எல்ஏ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் அங்குள்ள கிராமத்தில் விழுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
தென்னாபிரிக்கா விண்வெளி ஆய்வு கழகம் தற்போது விண்கல்லின் சிதறிய பாகங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்த விண்கல் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பூமியில் இருந்து 3,85,600கிமி தூரத்தில் இருந்துள்ளது. அதாவது நிலவின் தூரமும் இந்த விண்கல்லின் தூரமும் ஒன்றாக இருந்திருக்கிறது.
நாட்கள் செல்கையில் பூமியை நோக்கி வர ஆரம்பித்த விண்கல் பூமி அருகே வரவர அதன் அளவும் குறைந்திருக்கிறது.
இந்த வாரம் பூமியின் மீது மோதும் என்று நாசா கணித்திருந்த நிலையில் அது பூமியின் எந்த பகுதியில் விழும் என்பது பற்றி உறுதியாக சொல்ல முடியாமல் திண்டாடியது.
இருப்பினும் கடந்த சனிக்கிழமை அன்று தென்னாப்பிரிக்காவில் விழும் என்று கணித்த நாசா தென்னாபிரிக்காவின் எந்த பகுதியில் விழும் என்பதை உறுதியாக தெரிவிக்கவில்லை.
தென்னாபிரிக்காவின் போட்ஸ்வானா எனும் கிராமத்தில் இந்த விண்கல் வந்து மோதி வெடித்திருப்பதாக இப்போது வெளியான சிசிடிவி காட்சிகள் உறுதி செய்துள்ளன. 61,155கிமி வேகத்தில் பூமி நோக்கி வந்த விண்கல் நொடிக்கு 17கிமி வேகத்தில் பயணம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

பூமியை அடைந்ததும் தீப்பற்றிய விண்கல் பின் விழும் போது வெடித்து சிதறியுள்ளது. இதனால் பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. நாசா இந்த விண்கல்லை தற்போது ஆய்வு செய்து வருகிறது.

http://news.lankasri.com/othercountries/03/180470?ref=ls_d_world

No comments:

Post a Comment