Monday, June 25, 2018

இறுக்கமான உள்ளாடை அணியும் பெண்களுக்கு!

பெண்களில் பலரும் உடல் அமைப்பு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக இறுக்கமான உள்ளாடைகளை அணிகிறார்கள்.
இதனால் ரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜி உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
சீரான ரத்த ஓட்டம் தடைபடுவதுடன் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் உண்டு.
இதனால் அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போகும், தினமும் இவ்வாறு செய்வதால் உடல்நல அபாயங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஒருசிலர் வயிற்று பகுதி வரை இறுக்கமாக அணியும் போது, வயிறு பகுதியை கடினமாக உணர்வார்கள்.
காற்றோட்டம் தடைபடுவதால் பக்டீரியா உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக காட்டன் துணியில் தயாரித்த உள்ளாடையை அணிவது தான் சிறந்தது. இது, வெப்பம் மற்றும் குளிர் என இரு நிலைகளிலும், மார்பகங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

http://news.lankasri.com/women/03/181911?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment