Tuesday, June 5, 2018

கனடாவில் சிக்கலில் சிக்கிய தமிழ் பொலிஸ் அதிகாரியும் தேர்தல் வேட்பாளருமானவரின் நிலை?


பொலிஸ் அதிகாரியும் ஒன்ராறியோ புரோகிறசிவ் கட்சி தேர்தல் வேட்பாளருமான றொஷான் நல்லரட்னம் என்பவர் வெளியிட்ட மின்அஞ்சல் குற்றச்சாட்டு குறித்து புலன் விசாரனை மேற்கொண்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.
புதிய ஜனநாயக கட்சியினரால் பொதுமையாக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மின்அஞ்சல் "எனக்கு எதிராக மோசமான பிரச்சாரம் செய்ய வேண்டாம். தேர்தலிற்கு பின்னர் நான் பாடம் கற்பிப்பேன்"; கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
இதனை பெற்றவர் நினைவிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்அஞ்சல் 96 பேர்களிற்கு அனுப்ப பட்டுள்ளதாக என்டிபி தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை தமிழ் சமுதாயத்தவர்களிற்கு எனவும் கூறபட்டுள்ளது.
-நல்லரட்னம் என்பவரால் இத்தகைய ஒரு மின்அஞ்சல் அனுப்ப பட்டதாக குற்றம் சாட்டப்பட்டமை குறித்து ஒரு தொழில் முறை தரநிலை விசாரனை தொடங்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோ பொலிஸ் பேச்சாளர் மார்க் புகாஷ் தெரிவித்துள்ளார்.
நல்லரட்னத்தின் குற்றம் சார்ந்த நடத்தையை கண்டித்தும் அவரை மன்னிப்பு கோருமாறும் புதிய ஜனநாயக வாதிகள் கட்சி தலைவர் டக் வோட்டிடம் கேட்டுள்ளனர்.
நல்லரட்னம் Scarborough-Guildwood தொகுதியின் புரோகிறசிவ் கட்சி வேட்பாளரும் கடந்த ஒன்பது வருடங்களாக ரொறொன்ரோ பொலிஸ் சேவையில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவருமாவார்.
இவர் இச்சம்பவம் குறித்த கருத்து கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோகிறசிவ் கட்சி வேட்பாளரான றொஷான் நல்லரட்னம் என்பவரால் அனுப்ப பட்ட ஒரு மின்அஞ்சல் என என்டிபி கட்சி தெரிவிக்கும் மின்அஞ்சல் இதோ:
இவ் விடயம் தொடர்பில் கனடா ஊடகம் வெளியிட்ட தகவல் இங்கு அழுத்திப் பார்க்கவும்



http://www.jvpnews.com/othercountries/04/175034?ref=home-jvpnews

No comments:

Post a Comment