Saturday, June 2, 2018

தூத்துக்குடி போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு கண்டிக்கத்தக்கது: ஐ.நா சபை


தூத்துக்குடியில் 100 நாட்களாக பொதுமக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடந்து வந்தது.
இந்நிலையில் 100வது நாள் அன்று நடந்த கலவரத்தில் பொலிஸாரின் துப்பாக்கி குண்டிற்கு 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மோசமான காயங்களுடன் போராடி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான அறிக்கையில் மனித உரிமை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பிற்காக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் ஆயுதங்கள் மூலமாக தாக்கியற்கும் மற்றும் அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ நா சபை குறிப்பிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி ஐக்கிய நாடுகளின் சபையின் கொள்கைகளை அனைத்து விதமான தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் மனித உரிமைகளை மதிக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமை மற்றும் சுற்று சூழல் உரிமைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐ நா நிறுவன அறிக்கை கூறுகின்றது.

http://news.lankasri.com/india/03/180155?ref=recommended1

No comments:

Post a Comment