Saturday, May 12, 2018

நடு ரோட்டில் நாய் செய்த நெகிழ்ச்சி செயல்


கொலம்பியாவில் குடிபோதையில் ரோட்டில் விழுந்து கிடந்த எஜமான் அருகில் யாரையும் வரவிடாமல் நாய் ஒன்று தடுத்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலாம்பியாவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மது அருந்தியது போல் தெரிகிறது. மது அருந்தியதன் காரணமாக அவர் அங்கிருக்கும் ரோட்டில் நடக்க முடியாமல் அங்கே படுத்து கிடந்துள்ளார்.
இதனால் அவ்வழியே வந்த பொதுமக்கள் அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்த போது, அவருடைய செல்ல பிராணியான நாய் யாரையும் அருகில் விடாமல் குரைத்துக் கொண்டும் கடிக்கவும் முற்பட்டுள்ளது.


இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அந்த இடத்திற்கு வந்த பொலிசார் குடி போதையில் இருந்த நபரை எழுப்ப முயற்சி செய்கிறார். இதற்காக நாய் கடித்துவிடாமல் இருக்க கட்டை ஒன்றையும் கையில் வைத்துள்ளார்.
ஆனால் அதைப் பற்றி பயப்படாமல் அவர் அருகே சென்றால் நாய் கடிக்கவே முற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் முகத்தின் அருகே சென்று எழுப்ப முயற்சி செய்கிறது.

இப்படி தொடர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த ஹெல்மேட்டை எடுக்க, அந்த நபர் சற்று கண் விழித்து பார்த்தார்.
அதன் பின் பொலிசார் அவரை கையை வைத்து தூக்கி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 24 மணி நேரங்களில் 650,000 பேர் பார்த்துள்ளனர்.

http://www.canadamirror.com/othercountries/03/178588?ref=ls_d_canadamirror

No comments:

Post a Comment