தொலைக்காட்சி!!

Saturday, May 12, 2018

உங்கள் ராசிப்படி விரைவில் செல்வந்தராக இதை மட்டும் செய்து வாருங்கள்


செல்வந்தர் ஆவது எப்படி என்பது பற்றி பல்நூறு புத்தகங்கள் எழுதப்பட்டு விற்பனையிலும் சாதனை படைத்துள்ளன, அவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
இப்போது நமது ராசிப்படி நாம் ஒரே ஒரு செயலை தொடர்ந்து செய்வதன் மூலம் விரைவாக செல்வந்தர் ஆகி விட முடியும்.
தானம் என்பது ஒரு மனிதனின் தியாகத் தன்மையை அதிகரிப்பததற்காகவும், அதன் மூலம் அவனது பொறுமை மற்றும் மற்றவர்களை நேசிக்கும் தன்மை வளர்வதற்கு வேண்டியும் இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகும்.
அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட தானங்களை மேற்சொன்ன வகையில் பெருந்தன்மையோடும் நல்மனத்தோடும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் செய்து வர அவர்களது பாவம் விலகி ஐஸ்வர்யம் ஏற்படும் யோகம் உண்டாகும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும், சிவன் கோயிலுக்கு சென்று வரும்போது அங்கு வாசலில் உள்ள யாசகர்களுக்கு தானம் செய்து வர வேண்டும்.
மேலும் மாற்று திறனாளிகளுக்கு வேண்டிய உதவியை இவர்கள் செய்து வந்தால் பணக்கார யோகம் உடனே வந்தடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்து வர வெகு விரைவில் பணவரவு அதிகரித்து செல்வந்தர் ஆகி விடுவார்கள்.
அதனோடு ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்களால் முடிந்த உதவியை இவர்கள் செய்து வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்து வர வேண்டும், புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண்பொங்கலை தானம் கொடுக்க வேண்டும்.
ஏழை மாணவர்களின் கல்விக்கு இவர்கள் பண உதவி செய்து வந்தால் செல்வம் தானாக இவர்களை வந்தடையும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் பசு மாட்டிற்கு உணவு தானம் செய்து வருவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும், இப்படி செய்வதால் குடும்ப வறுமை விலகி செல்வம் சேரும்.
இது தவிர ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி கொடுத்து உதவி செய்ய செய்ய இவர்களுக்கு ஐஸ்வர்யம் சேர தொடங்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்து வர வேண்டும், அதனால் மனது அமைதி அடையும்.
மேலும் இவர்கள் மாற்று திறனாளிகளுக்கு அவர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுத்தால், வாழ்வில் எல்லா வளங்களும் இவர்களை வந்தடையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் குரு பகவானை தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவினை தானம் செய்ய வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுகோல் ஆகியவற்றை தானம் செய்வதால் குபேரன் நிலையாக உங்களோடு தங்கிவிடுவார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும், பசியால் வாடுபவருக்கு வெண்பொங்கல் தானம் செய்து வர வேண்டும், இதனால் புதிய சொத்துக்கள் வந்து சேரும்.
மேலும் கண்பார்வை குறைவுடையவருக்கு உதவி செய்து வரலாம், மஹாலக்ஷ்மி கடாக்ஷம் சித்திக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கடன்கள் தீர ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபாட்டு பானகம் தானம் செய்யலாம்.
அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்து வர வேண்டும், மேலும் மாற்று திறனாளிகளுக்கு வேண்டிய உதவி செய்து வர பணவரவு பெருகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருக வழிபாடு செய்ய வேண்டும், முருக பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கு தானம் தரலாம்.
வாரம் ஒருமுறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்வதுடன் செவ்வாய்க்கிழமைகளில், சாம்பார் தானம் செய்து வந்தால் வாழ்வு செழிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவ வேண்டும், மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம்.
இதனால் தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும், வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும், ஏழைகளுக்கு கூட்டான்சோற்றை அடிக்கடி தானம் செய்ய வேண்டும், இதன் மூலம் இவர்களின் பணவரவு இரட்டிப்பாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பௌர்ணமி நாட்களில் சிவதரிசனம் செய்வது நல்லதாகும், ஏழை மாற்று திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும்.
மேலும் நல்லெணெய் தீபம் தானம் செய்தால் கூடுதல் நன்மை உண்டாகும், ஐஸ்வர்யம் சேரும்.


http://news.lankasri.com/astrology/03/178550?ref=ls_d_others

No comments:

Post a Comment