Sunday, May 6, 2018

12 வருடங்களுக்குப் பின் நாடு திரும்பிய இலங்கை அகதிகளுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு


இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு போர் காரணமாக 2006ஆம் ஆண்டு மன்னார் ஊடாக இடம்பெயர்ந்து இந்தியா சென்ற இவர்கள் 12 வருடங்களுக்குப் பின்னர் நேற்று நாடு திரும்பியிருந்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர்கள் இந்தியாவுக்குச் சென்று அங்கு புதுக்கோட்டை முகாமில் தங்கியிருந்துள்ளார்கள். பின்னர் திருமணம் முடித்து முகாமிலிருந்து வெளியேறி வசித்து வந்துள்ளனர்.
இந்தியாவில் வாழ்வாதாரத்துக்கான வருமானம் அற்ற நிலையில் நாடு திரும்பும் எண்ணத்துடன் கடந்த 24ஆம் திகதி படகில் புறப்பட்டுள்ளனர்.
கரையை அண்டிய பகுதியில் 8 நாட்கள் தங்கியிருந்து நேற்று முன்தினம் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளனர்.
3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 4 பேர் சிறுவர்கள், சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா செலுத்தி நாடு திரும்பியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்யும் போது இரண்டு படகோட்டிகளும் இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.


http://www.tamilwin.com/community/01/181889?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment