Saturday, April 21, 2018

விஜயனின் வருகைக்கு முன்னரே தமிழ் மக்கள் சிறப்பாக வலிமையாக வாழ்ந்துள்ளார்கள்!


எமது யாழ்ப்பாணத்தின் பழைய பெயர்கள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா????????கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இருந்து----நாகநாடு,சிங்கைநாடு,மணவை(மணற்றி) ஈழம் ,தமிழ்ப்பட்டினம் ---விஜயனின் வருகைக்கு முன்னரே தமிழ் மக்கள் சிறப்பாக வலிமையாக வாழ்ந்துள்ளார்கள் என்பது--முதுமக்கள் தாழிகள் ஒரு வரலாற்றின் ஏடு-

மணற்றிதான்  பின்னர் போக்குவரத்து காரணமாக பாஸ் வழங்கிய காரணத்தால் 
காரண பெயராக பாசூர் என வந்து பின் திரிபடைந்து பாஷையூர் ஆனது!

கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரி  ஸ்தாபிக்கப்பட்ட மண். நரைமண் நிலம். நான்கு திசைகளும் வயல்களால் சூழப்பட்டது. அந்தப் பச்சைப் பசிர் வயல்களில் பல குளங்கள், வாய்க்கால்கள், ஆலயங்கள் ஆங்காங்கே நிமிர்ந்து நிற்கும் காட்சி. ஊரில் ஆங்காங்கே பல ஆலயங்கள். வழுக்கையாறு என்று சொல்லப்படும் தண்ணீர் வழிப்பாதை அராலிக்கடல் வரை ஓடுகின்றது. அந்தக் காலங்களில் இராசதானியாக விளங்கிய கந்தரோடைக்கு அராலிக்கடலிலிருந்து இந்த வழுக்கையாறில் தான் போக்குவரத்து நடைபெற்றிருக்கின்றது. நெல் பயிரிடுதலுக்கு உகந்த நரைமண் பிரதேசம். கோடைகாலத்தில் மரக்கறிகள் பயிரிடுதலுக்குகந்த மண்.

No comments:

Post a Comment