Monday, April 30, 2018

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: கனடா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்


உலக மக்கள் அனைவரது உள்ளத்தையும் உலுக்கிய சிரியா சிறுவன் அலன் குர்தியின் குடும்பத்திற்கு கனேடிய அரசாங்கம் குடியுரிமை வழங்க மறுத்த விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஒரு புகைப்படம் உலுக்கியது.
துருக்கி கடற்கரையில் ஜீவனற்று கிடந்த சிறுவனின் புகைப்படந்தான் அது. அலன் குர்தி என்ற அந்த சிரியா சிறுவனும் அவனது குடும்பத்தினரும் அகதியாக தஞ்சம் கோரி படகில் புறப்பட்ட நிலையில், படகு கவிழவே அதில் பலர் உயிரிழந்தனர், அதில் சிறுவன் அலன் குர்தியின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது.

கனடாவில் அப்போது தேர்தல் ஜுரம் உச்சியில் இருந்த காலகட்டம். அகதிகளாக தஞ்சம் கோரியவர்களுக்கு உரிய பதில் அளிக்க மறுத்து கனடா நிர்வாகம் மெத்தனம் காட்டியதாகவும், அதில் அலன் குர்தியின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனேடிய செய்தி நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிரியா அகதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மின்னஞ்சல் தகவல்களை கொண்ட 532 பக்க ஆவணங்களை திரட்டிய கனேடிய செய்தி நிறுவனம், அதில் அகதிகள் மீது முந்தைய அரசின் மெத்தன போக்கை கடுமையாக விமர்சித்துள்ளது.
சம்பவத்தன்று அலன் குர்தியின் புகைப்படம் உலகின் ஒட்டு மொத்த பத்திரிகையின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க, அந்த புகைப்படம் கனேடிய அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததும், உடனடியாக அரசாங்கத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்டீபன் ஹார்ப்பரின் தலைமையிலான கன்சர்வேடிவ் அரசாங்கம் சிரியா அகதிகள் 10,000 பேருக்கு புகலிடம் தந்துள்ளதையும் முக்கியப்படுத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பில் செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அதிகார மையம் முறையாக பதிலளிக்கவும் மறுத்துள்ளது.
சமீபத்தில் சிறுவன் அலன் குர்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்றில், அலன் குரிதியின் புகைப்படம் எவ்வாறு அகதிகளிடம் உலக நாடுகளின் பார்வை மாறியது என்பதை விளக்கியுள்ளது.
இருப்பினும் கனேடிய அரசாங்கம் அலன் குர்தி விவகாரத்தில் திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டது என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போதை ட்ரூடியோ அரசாங்கம் இதுவரை 51,800 சிரியா அகதிகளை வரவேற்றுள்ளது அரசாங்க ஆவணங்களில் இருந்தே தெரிய வந்துள்ளது.
அரசியல்வாதிகள் எப்போதும் எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்வார்கள், ஆனால் செயலில் காட்டமாட்டார்கள்.
ஆனால் பொதுமக்கள் நாம் தான் நமது மெளனத்தை கலைத்து அரசாங்கத்தை தொடர்ந்து நினைவு படுத்த வேண்டும் என சிறுவன் அலன் குர்தியின் உறவினர் டிமா குர்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/canada/03/177671?ref=ls_d_canada

No comments:

Post a Comment