Sunday, April 22, 2018

முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் கார் ஓட்டியதால் ரத்து செய்துவிட்டேன்: சமூகவலைதளத்தில் சர்ச்சை !


ஓட்டுநர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது காரில் நான் பயணிக்கவில்லை என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர் டுவிட் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் மிஸ்ரா என்பவர் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவை சேர்ந்தவர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஓட்டுநர் முஸ்லீம் என்பதால் ஓலாகேப்பை ரத்து செய்துவிட்டேன். நான் எனது பணத்தை ஜிகாதி மக்களுக்கு தரமாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ‘நான் மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற அணிக்கான விருதை பெற்றவர்.



http://news.lankasri.com/india/03/177080?ref=ls_d_india

No comments:

Post a Comment