Monday, December 11, 2017

யாழில் வீடு புகுந்து அட்டகாசம் செய்த வாள்வெட்டு கும்பல்: முறைப்பாடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்

யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் ஒன்று வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த நிலையில் குறித்த சம்பவத்தை முறைப்பாடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிவிப்பதற்கு பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது “நீங்கள் பேசுவதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என சிங்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கம் மும்மொழிகளிலும் உள்ளது என தெரிவிக்கப்பட்ட போதும் தமிழில் முறைப்பாடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, யாழ். ஆனைக்கோட்டை பகுதியில் நேற்று இரவு வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகளை மறைத்தவாறு வந்த கும்பல் குறித்த வீட்டிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை வாள்களை காட்டி அச்சுறுத்தி விட்டு, வீட்டில் இருந்த தளபாடங்களை கைக்கோடரியால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வீட்டில் இருந்த அலுமாரியை கோடரியால் கொத்தி அதனுள் இருந்த 40,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 5 பவுண் நகை என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், “குறித்த வீடு யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குள் அமைந்து உள்ளது” என மானிப்பாய் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்காத நிலையில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.





http://www.tamilwin.com/community/01/167710

No comments:

Post a Comment