Monday, December 18, 2017

சங்கர் ஆணவக்கொலை ஒரு ஆய்வு !

தமிழ் கடவுள் பழனி ஆண்டவருக்கு தங்கவேல் சாத்திய பாரம்பரிய குடும்பம்  சின்னச்சாமி_தேவர் குடும்பம்,

பாண்டிய மன்னன் தன் நெருங்கிய உறவினர்கள் ஆன இவர்களை சாளுக்கிய படையெடுப்பை தடுக்க மதுரையில் இருந்து அனுப்பப்பட்டு அப்பகுதியில் தளவாயாக (ஆளுநர் போன்ற பொறுப்பு) நிலைக்கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது, 

இது இவர்கள் குடும்ப பாரம்பரியம், அப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்களின் குடும்பத்தில் ஒரே பெண்ணாக கவுசல்யா பிறந்து சின்னச்சாமி தேவரால் மிக செல்லமாக வளக்கப்பட்டாள், ஒரு தம்பி பெயர் கவ்தம், வழக்கமாக பெண்ணுக்குத்தான் அவர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியது இல்லை,

( பாரம்பரியம் சொல்வது அவர்களின் சாதி பெருமைக்கு இல்லை, அத்தகைய பாரம்பரியம் எத்தகைய அழுத்தம் கொடுக்கும் என்பதற்காக)

பள்ளி மேற்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அனுப்பினார்கள் கவுசல்யாவை, அப்போது வயசு 17 கொண்ட துடுக்கான சிறுமியாக இருந்தார் , தலித் பள்ளர் வகுப்பை சேர்ந்த சங்கர் ஏற்கனவே அங்கு படித்து வருகிறான், தலித் இயக்க தலைவர்கள் ஏற்கனவே உசுப்பேத்தி நீ கீழ்ஜாதி அதால நீ மேல் ஜாதி பெண்களை திருமணம் செய்யுங்கள்ன்னு என்ற உசுப்பலால் உந்தப்பட்டு காத்திருக்கிறான் , சங்கர்,கவுசல்யா கல்லூரியில் சேர்ந்த அன்றுமுதல் குறிவைத்து செய்லபடுகிறான் மூன்றாவது நாளே நான் உன் சாதிகாரபயத்தான் ன்னு பொய் சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொண்டு உடனே நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்றான், இங்கதான் நீங்க கவனிக்கணும் கவுசல்யா கல்லூரியில் சேர்ந்து மூணாவது நாள் காதல் (????), முதலில் தான் படிக்க வந்திருப்பதாக கவுசல்யா மறுத்து பணக்கார திமிருடன் எச்சரித்தாலும் பிறகு சங்கரின் தொடர் கெஞ்சல் தொல்லையால் அவளும் ஏற்றுக்கொள்ளும் சூல்நிலைக்கு ஆளாகிறாள்,
காதல் முற்றிய 17 வயது சிறுமிக்கு பிறகே அவன் குடும்பம் இன்னபிற விபரங்கள் தெரிகிறது அது காலம் கடந்து விட்டது, சங்கர் நினைத்ததைவிட கவுசல்யா அவனுடன் நெருங்கிவிட்டாள், அடுத்த திட்டம் திருமணம், உன் பெற்றோர்கள் நம் காதல் தெரிந்தால் உனக்கு உங்க சாதியில் திருமணம் செய்துவைத்து நம்மை பிரித்துவிடுவார்கள் அல்லது என்னை கொன்றுவிடுவார்கள் என்று இதை சொல்லியே பதிவு திருமணம், ஒரு வார்த்தைக்கு கூட அந்த சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கவில்லை, திருமண பதிவு முடிந்தவுடன் அழைத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்று விடுகிறான்,
கவுசல்யாவின் குடும்பமே பிள்ளையை அதுவும் பெண் பிள்ளை என்றால் சொல்லவா வேண்டும் ? பாசத்தில் அலறி அடித்துக்கொண்டு தேடுகிறார்கள் பெற்றவர்களும் உறவினர்களும்,ஆனால் சங்கரின் வீட்டில் உள்ளவர்களுக்கோ அதுகுறித்து எவ்வித கவலையும் இல்லாத பெரும் சாதித்த மகிழ்ச்சி, குதூகலம், ஒரு பேருக்காவது பிள்ளையை பெத்தவங்க தேடுவார்களே, பதறுவாங்களே என்ற எவ்வித கவலையோ மனிதாபிமானமோ இல்லை, ஒரு தகவலாவது சொல்ல கூட அவர்களுக்கு மனம் இல்லை, என்ன ஒரு சுயநலம் ?
சரி கவுசல்யா குடும்பம் குறித்து பயம் இருப்பது உண்மை நேரடியாக சொல்லமுடியாது காவல்துறை அல்லது தலித் இயக்க தலைவர்கள் வழியாக தகவல் சொல்லி இருக்கலாம்,

பிறகு கவுசல்யாவின் கல்லூரி தோழிகள் வழியாக தகவல் அறிந்த கவுசல்யாவின் பெற்றவர்களுக்கு உயிர்போன ரணம், காரணம் அக்கம் பக்கம் யாருன்னு தெரியாத அவர்கள் வாழ்வது சென்னை போன்ற பெருநகரம் கிடையாது, ஊரில் பேர் போன குடும்பம், அவர்களை சுற்றி அங்காளி,பங்காளி, மாமன் ,மச்சான், என உறவினர்கள் கூட்டம், அத்தகைய சூழலில் ஒரு பெண் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் என்னவாகும் ? மரண தண்டனைக்கு ஒப்பான ஒரு இறுக்கமான சூழல் அப்போதே கவ்விக்கொள்கிறது,

முதலில் கவுசல்யா தாத்தாவை அனுப்பி அழைத்துக்கொண்டு வந்து வந்து நிலைமையை சொல்லி சின்னச்சாமி மற்றும் கவுசல்யாவின் அம்மா அண்ணலெச்சுமி, தம்பி கெளதம் என மொத்த குடுமபமும் கெஞ்சுகிறது நீ சின்ன பண்ணு படிக்கிற வயசு, படிப்பை முடி பிறகு உன் கல்யாணத்தை பத்தி பேசுவோம்ன்னு, ஆனால் இளம் கன்று பயம் அறியாது தானே அவளை யோசிக்க அவகாசம் சங்கர் கொடுக்கவில்லை,
சங்கர் போன் செய்து அங்கே இருக்காதே உங்க சொந்தகாரப்பயலுகளுக்கு கட்டிவச்சிடுவாங்க வந்துடுன்னு சொல்றான்,கவுசல்யாவும் இரவோடு இரவாக சங்கரின் வீட்டுக்கு சென்றுவிடுகிறாள்,
இதில் பெரிய கொடுமை என்னான்னா சங்கர் கவுசல்யா படிப்பை நிப்பாட்டி திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பிட்டு அவன் இறுதியாண்டு படிப்பை முடிக்க ஆயுத்தமாகிறான், என்ன கொடுமை இது ? இதுக்கா பெண்ணை பெத்து கல்லூரிக்கு அனுப்புகிறார்கள் பெண் குழந்தைகளை ?, சங்கர் சொன்ன காரணம் குடும்பத்தில் ஒருவர் படிச்சா போதும் நான் படிச்சி வேலை எடுத்திடுவேன் அதுவரை நீ வேலைக்கு போன்னு வசதியா வாழ்ந்த கவுசல்யாவை வேலைக்கு அனுப்பிட்டு அவள் உழைப்பில் சங்கரின் குடும்பமே வாழ்கிறது, இந்த தகவல்களும் கவுசல்யா குடும்பத்துக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது,

உற்றார் உறவினர்கள் கேலி பேச்சுக்கள், சாடைபேச்சுக்கள், குறிப்பாக ஒரு திருமண நிகழ்வுக்கு சென்ற கவசல்யாவின் அப்பா சின்னச்சாமியை உறவினர்களில் சிலர் அவரை வெளியே போகலைன்னா நாங்க போறோம் என்று சொல்லி மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்த பிறகு நடந்த துன்பியல் நிகழ்வுகள் நாம் அறிவோம்,

காதல் தவறு இல்லை, ஆனால் படிக்கவேண்டிய வயதில் வாழ்க்கையை காதல் என்ற குட்டைக்குள் விழுந்து கிடைக்கும் தவளையாக மாறக்கூடாது,
பெற்றவர்களின் வலி வேதனை நீங்கள் ஒருநாள் பெற்றவர்களாக இருக்கும்போது உணர்வீர்கள்,
ஜாதி தனிமனிதன் சார்ந்தது கிடையாது அவனை சுற்றியுள்ள சமூக சூழலும் காரணம், அதை சிறுக சிறுக
மாற்ற வேண்டும் அதற்காக வாழவேண்டிய வயதில் உள்ளவர்களை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதும் கண்டிக்கத்தக்கது,
எட்டு மாதங்கள் போராடிய கவசல்யாவின் அப்பா சின்னச்சாமி ஒருபக்கம்
தன் காதலில் ஜெயித்து விட வேண்டும் என்ற 17 வயது உலகம் அறியாத வயதில் உள்ள கவுசல்யா மறுபக்க கொடுமையை பாருங்கள் தாய் அன்னலச்சும்மிக்கு தூக்கு வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய போகிறாளாம் இந்த பேதை பெண்,
எந்த கொலைகளையும் ஆதரிக்கவில்லை ஆனால் அதன் பின்புலம் குறித்து நேர்மையாக துணிவாக ஆய்வுசெய்து பார்க்க வேண்டும், சின்னசாமி சமூகம் தென்மாவட்டங்களில் தலித்துகள் மீதும் நாடார்கள் (1899 சிவகாசி சூறையாடல் & சேதுபதி மன்னர்கள் நாடார்கள் ஆலைய நுழைவு தடை) மீதும் நடத்திய அடக்குமுறைகள் கணக்கில் அடங்காது,

ஆனால் சின்னசாமி ஒரு கொலையை தொழிலாக கொண்டவராக இருந்தவர் இல்லை, சூழ்நிலை கைதி, அவரின் சமூக சூழல் அவர் சிறுவயது பெண்ணால் நேர்ந்தது, எனக்கு பிடிக்காத அடக்குமுறை சமூகம்தான் கவுசல்யா பிறந்த சமூகம், பள்ளியில் சேரும்போதே சாதி சான்றிதழ் கொடுத்துவிட்டு நீதிபதிகள் முதல் சமூக போராளிகள் வரை சாதி இல்லை என்று பொய் சொல்வதை விடுத்து இருப்பதை ஒப்புக்கொண்டு அதில் உள்ள சமூகங்கள் இடையேயான பிரச்ச்னைகளை ஆயுவு செய்தால் நல்லது, எந்த சட்டம் போட்டாலும் திடீர் ஆணவ கொலையாளிகளை தடுக்க முடியாது, யாரும் அவர்கள் வீட்டு பெண்குழந்தைகள் என்றால் புத்தியை விட்டு கத்தியை எடுப்பார்கள் அதுதான் உண்மை,
கவுசல்யாவை தங்கள் அரசியளுக்கு சிலர் பயன்படுத்திக்கொண்டு உள்ளனர், பத்திரிகையாளர்கள் முன் கவுசல்யாவை எழுதிக்கொடுத்து இயக்கம் இயக்குனர்கள் யார் என்று அந்த காட்டு பயலுகள் கூட்டத்துக்கு தெரியாமல் இல்லை, உங்களுக்கும் ஆபத்தாக முடியும் எச்சரிக்கையாக் இருங்கள்,இதில் நான் ஒரு தாய்மையின் குணத்துடன் அவர்கள் பக்கம்.

#தமிழச்சி
18/12/1017





தமிழச்சி என்ற தெலுங்குப் பெண்ணால் கூட நியாயமாக எழுத முடிகின்றதே!

அவரே ஜாதி என்பது தீண்டத்தகாத சொல் அல்ல,உண்மையில் அது தொழில்ப்பிரிவு என்று மக்களுக்கு(அவர் followers) உணர்த்தலாமே!

பிறப்பால் வருவது வர்ணம்,அது கூட ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒன்றாக அமையாது(விரல்கள் ஒரே நீளமா என்ன?)ஆனால் பிறப்பிலேயே அதன் ஆர்வம் தீர்மானிக்கப்பட்டுவிடும்!

வர்ணமும் ஜாதியும் மனிதன் மிருகம் அல்லது பறவை போல இயற்கை வாழ்வுக்கு வந்தாலன்றி பிரிக்க முடியாதவை என்றும் உணர்த்தலாமே!

மேலும் எல்லாத்தொழில்களும் வேண்டியவையே,எல்லா வர்ணங்களும் சமமே என்றும் உணர்த்தினால் பல பிரச்சனைகள் ,திராவிட ஏமாற்று எல்லாம் அழியுமே!

இன்று அத்தியாவசிய விவசாயம் செய்ய வேளாளன் இல்லாமைக்கு காரணம் அவனுக்குரிய அந்தஸ்து மறுக்கப்பட்டதும் அவன் சிந்தும் வியர்வைக்கு நியாய விலை இல்லாததுமே!
ஆனால் உழவு இல்லை என்றால் எல்லா வீட்டிலும் இழவு நிச்சயம்!

முக்கியமற்ற சினிமா,ஊடகங்கள் சம்பாதிக்கும் செல்வம் நியாயமானதா அல்லது முக்கிய உணவு,உடை,உறையுள் சம்பந்தப்பட்ட தொழில்கள் அழியும் நிலை நியாயமா?

எது உயர் தொழில்?
எது உயர் ஜாதி?

அன்று கூத்தாடிகள் என்று தாழ்வாக பார்த்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தருவோர் இன்று சமூகத்தின் தலைவர்கள் என்றால்...

வேளாளன் தாழ்ந்த புறக்கணிக்கப்படும் ஜாதி என்றால்....

தமிழன் வள்ளுவனை காலில் போட்டு மிதிப்பதே உண்மை!

இந்த நிலையும் ஆங்கில நீதி,சட்டமும் சம்பந்தமே இல்லாமல் நம்மை அடிமை செய்யும் வரை நாம் அழிவதை யாராலும் தடுக்கமுடியாது!

தமிழச்சி தன் வாசகருக்கு இதை தெளிவாக்கலாமே!

1 comment: