Friday, December 1, 2017

யாழ் போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

வடக்கில் பரு­வ­மழை தற்போது ஆரம்­பித்­துள்­ள­தால் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அதிக எண்­ணிக்­கை­யான நோயா­ளர்­கள் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.
குறிப்­பாக டெங்கு நோயின் தாக்­கம் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­கின்­றது. அத­னால் மருத்துவமனையிலுள்ள நோயா­ளர்­க­ளைப்­பார்­வை­யி­டு­வ­தை இயன்­ற­ளவு தவிர்த்­துக் கொள்­ளுங்­கள்.
இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் மருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் அனுப்­பி­யுள்ள செய்­திக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
மழை­யின் பின்­ன­ரான சூழ்­நி­லை­க­ளால் போதனா மருத்­து­வ­ம­னை­யில் மிகுந்த நெருக்­க­டி­யான நிலை­யில் நோயா­ளர்­க­ளுக்­குச் சிகிச்சை வழங்க வேண்­டி­யுள்­ளது.
எனவே பொது­மக்­கள் நோயா­ளி­க­ளைப் பார்­வை­யிட வரு­வதை இயன்­ற­வரை தவிர்த்­துக் கொள்­ளு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றீர்­கள். ஒரு நோயா­ளி­யைப் பார்­வை­யி­டு­வ­தற்கு இரு­வர் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.
மகப்­பேற்று விடு­தி­க­ளில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் மாத்­தி­ரமே நிற்­ப­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வர். குழந்­தை­கள் பிறக்­கின்­ற­போது மருத்­து­வ­ம­னைக்கு வரு­கை­தந்து பார்­வை­யி­டு­வதையும் இயன்­ற­வரை தவிர்த்து வீடு சென்ற பின்­னர் பார்­வை­யி­டு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கின்­றீர்­கள்.
பொது­மக்­கள் நோயா­ளி­யைப் பார்க்க வரும்­போது தாம் கொண்­டு­வ­ரும் உணவு, உடை முத­லான பொருள்­க­ளைக் கொடுத்­து­விட்டு விரை­வாக விடு­தி­களை விட்டு வெளி­யேறி மருத்­துவ சேவையை வழங்க ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர் என்­றுள்­ளது.

http://www.canadamirror.com/srilanka/04/151861

No comments:

Post a Comment