Wednesday, December 27, 2017

யாழ். இளைஞனின் திகில் நிறைந்த வெளிநாட்டு பயணம்! 8 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் 8 வருடங்களின் பின்னர் தனது மனைவி மற்றும் மகனை சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பரா பஹீர் என்ற நபர் ஒருவரே இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
39 வயதான பரா பஹீர் யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ள நிலையில் இலங்கையில் நிலவிய போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த பரா கொடூரமான உள்நாட்டுப் போரைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாத நிலையில் வாழ்ந்து வந்தார்.
வறிய குடும்பமான பரா வீட்டில் மின்சாரம் இல்லை, அதனால் அவர் பாடங்களை தெரு விளக்கு வெளிச்சத்திலேயே கற்றார்.
அவர்களது வீடு அமைந்துள்ள தெருவில் ஒரே ஒரு வீட்டில் மாத்திரம் மின்சாரம் காணப்பட்டது. அங்கு சென்று இவர் தொலைகாட்சி பார்த்து தந்தையிடம் சிக்கி கொண்டார்.
இரண்டாவது முறையும் இவ்வாறு தந்தையிடம் சிக்கிய போது, தந்தை அவரை அழைத்து “உன்னை சுற்றி பார். சுற்றிலும் வறுமையே, யாரும் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை. ஒருவருக்கும் நல்ல தொழில் இல்லை. உனக்கு மூளை உண்டு, நீ கடினமாக உழைத்தால் இந்த சூழலை உடைக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஒரு போதும் தொலைகாட்சி பார்ப்பதற்கு அவர் செல்லவில்லை. அவர் அந்த கிராமத்து பிள்ளைகளுடன் பாடசாலை சென்ற போது, விடுதலை புலிகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையில் போர் கொடூரமாக இடம்பெற்றது.
அவருக்கு 9 வயதாக இருந்த போது அவரது தந்தை கைது செய்யப்பட்டார். விடுதலை புலிகளுடன் தொடர்புப்பட்டிருப்பதாக கைது செய்யப்பட்ட தந்தை தாக்கப்பட்டதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இறுதியில் உண்மை வெளியாகியமையினால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதே வயதில், இளம் தமிழர் கைது செய்யப்பட்டார், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதாக சந்தேகத்தில் பேரில் விடுதலை புலிகளால் சுட்டு கொல்லாட்டதனை அவர் அவதானித்துள்ளார்.
இவ்வாறான கொடூர போர் சூழலுக்கு மத்தியில் கல்வி கற்கைகயை நிறைவு செய்தவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அங்கு அவர் ஜெயந்தாவை சந்தித்தார். இருவரும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து அவர் ஜெயந்தாவை திருமணம் செய்து கொள்வதாக பரா உறுதியளித்தார். சமூக பிரச்சனைகள் காரணமாக இருவரினதும் திருமணத்திற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல மாதங்கள் கழித்து, அவரது குடும்பத்தை மீறி, ஜெயந்தா பராவை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். அவர்கள் அப்போது மாணவர்களாக இருந்ததோடு பழமைவாத வட இலங்கையின் பழக்கவழக்கங்கள் அந்த உறவைத் தடுத்தது. இதனால் அவர்கள் மூன்று ஆண்டுகளாக தங்கள் பந்தத்தை இரகசியமாக வைத்திருந்தனர்.
இலங்கை போரில் அரசியல் தொடர்பில் ஜெயந்தா அக்கறை காட்டவில்லை, எனினும் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். எனினும் பரா பல்கலைக்கழகத்தில் தனது நேரத்தை அரசியல்மயமாக்கினார், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்கு எதிராகவும் ஆர்ப்பாட்ட பேரணிகளில் கலந்து கொண்டார். மாணவ தலைவர் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
இதன் போது ஜெயந்தா அவரை எச்சரித்தார், 'இந்த விருப்பத்தை செய்தால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்றார். ஆனால் தனது மக்களுக்கு என்ன நடந்தது என்பதையே அவர் சிந்தித்தார்.
பரா தேர்தலில் வெற்றி பெற்றார், ஜெயந்தாவின் கணிப்பை போன்று ஒரு வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டிற்கு அவர் உயர்த்தப்பட்டார், உடனடியாக அவரை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு உட்பட்டார்.
அதன் பின்னர் பொலிஸாரின் சித்திரவதைகள், இராணுவத்தின் சோதனைகள் உட்டப பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.
பல்கலைக்கழக கற்கையின் பின்னர் பரா மற்றும் ஜெயந்தா திருமணம் செய்து கொண்டு, மன்னாரில் ஆசிரியராக தொழில் பெற்றனர். எனினும் கடந்த துன்பங்களுக்கு அப்பால் வெள்ளை வேன் அச்சுறுத்தலுக்கு பரா முகங்கொடுத்தார்.
அதன் பின்னர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார், அவரை கொலை செய்ய தயாரான போது, அவர் கற்ற பாடசாலையின் பேராயர் அவருக்காக ஆஜராகி அவரை காப்பாற்றினார்.
இதன்போது ஜெயந்தா கரப்பமாகினார், யார்ப்பாணத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. பேராயரின் உதவியுடன் கொழும்பிற்கு சென்ற தம்பதிகளுக்கு 2007ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
ஆனால் யுத்தம் மற்றொரு உச்சநிலையில் இருந்தது, பரா மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் இராணுவத்தினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்.
சில காலங்களில் பரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் - நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் வேண்டுகோளிற்கமைய இலங்கையில் தனக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தவர் தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு சென்றார். அங்கு 3 மாதங்களில் விசா நிறைவடைந்தவுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
எனினும் இலங்கையில் தம்மால் பாதுகாப்பாக வாழ முடியாதென்பதனை உணர்ந்த ஜெயந்தா பாதுகாப்பான நாட்டிற்கு செல்லத் திட்டமிட்டார்.
அதற்கமைய அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டனர். ஆட்கடத்தல்காரர்களிடம் சிறிதளவு பணம் வழங்கி அங்கு செல்ல பரா ஆயத்தமாகினார். முதல் பரா சென்றால் 3 மாதங்களின் பின்னர் குடும்பத்தை அழைத்து செல்ல முடியும் என அவர் எண்ணினார்.
திட்டமிட்டப்படி சட்டவிரோதமாக படகு மூலம் பரா அவுஸ்திரேலியா சென்ற போது, அவரது படகு விபத்துக்குள்ளாகியது. அவுஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இதன் போது அவரது நண்பர் ஒருவர் உதவியுடன் நண்பரும் அவரும் எண்ணெய் டிரம் ஒன்றில் ஏறி பயணித்தனர். 22 மணித்தியாளங்கள் அதில் இருவரும் மிதந்து சென்றுள்ளனர்.
22 மணிநேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரினார். அவரது தனது குடும்பத்தை பிரிந்தார். பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
பல வருடங்களா மனைவி மற்றும் மகனை பார்க்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் ஒரு விக்டோரிய பெண்ணுடன் ஏற்பட்ட நட்பினால் 8 ஆண்டுகளின் பின்னர் அவரது மனைவி மற்றும் மகனைப் பார்க்க சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது.
அவர் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற பின்னர் மனைவி மற்றும் பிள்ளை அழைப்பதற்கான விசாவை பெற்றார். தனக்கு உதவிய அனைவருக்கும் 8 வருட பிரிவின் பின்னர் மனைவியை பார்க்க கிடைத்தமைக்காகவும் பரா அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/australia/01/169233?ref=imp-news

No comments:

Post a Comment