Thursday, November 23, 2017

ஆப்பிரிக்க அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பிரான்ஸ்

நைஜரில் தங்கியுள்ள ஆப்பிரிக்க அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க பிரான்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்கின்றனர்.
ஆனால் லிபியாவில் இருக்கும் கடத்தல் கும்பல், அவர்களை சிறைபிடித்து 400 டொலருக்கு ஒவ்வொருவரையும் அடிமைகளாக விற்றுவிடுகின்றனர்.
இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் வட ஆப்பிரிக்காவில் நிலவும் மோசமான சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நைஜீரியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பாதுகாப்பு தேவைப்படும் மக்களுக்கு அகதி அந்தஸ்து கொடுத்து, தங்கள் நாட்டில் அடைக்கலம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், இது வன்கொடுமைகள், சித்ரவதைகள், பாலியல் ரீதியான கொடுமைகளில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும் எனவும், இதில் மற்றும் பல நாடுகளும் இணைய உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் வருகிற ஜனவரி மாதத்தில் பிரான்சுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://news.lankasri.com/france/03/137406

No comments:

Post a Comment