Friday, August 11, 2017

1900 முதல் 2016 வரையில் பூமியில் ஏற்பட்ட மாற்றம்! யாழ். குடாநாட்டு பகுதிக்கும் பாதிப்பு?

1900ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியின் பூமியின் வெப்பநிலை தரவுகளை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
இதன்படி, உலகில் உள்ள 190 நாடுகளை ஐந்து பிராந்தியங்களாக பிரித்து அவற்றின் கால வரிசை தரவுகளை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தரவுகளை ஆதாரமாக கொண்டு பின்லாந்து நாட்டை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் ஆண்ட்டி லிப்பொனென், உலக வெப்பநிலை மாறுதல்களை காணொளியாக வெளியிட்டுள்ளார்.
நாசாவின் (NASA GISS Surface Temperature Analysis) பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை பகுப்பாய்வு தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது
குறித்த காணொளியின் படி, நீல நிறம் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருப்பதை காட்டுகின்றது. செம்மஞ்சள் நிறம் சராசரி வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருப்பதை குறித்து நிற்கின்றது.
இதன்படி, ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டின் வெப்பநிலையும் ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ள போதிலும், ஒட்டுமொத்தமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும் ஆபத்தான போக்கை காட்டியுள்ளது.
இதேவேளை, யாழ். குடாநாடு உள்ளிட்ட வடபகுதியில் பாரிய வறட்சி நிலை ஏற்படும் என அண்மைய ஆய்வுகளை கொண்டு தகவல் வெளியாகியிருந்தது.
உலக வெப்பமயமாதல் காரணமாக தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடுமையான வெப்பத்தை உணர நேரிடும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
2100ஆம் ஆண்டளவில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உட்பட தெற்காசிய நாடுகளின் வெப்பம் நூற்றுக்கு 35 செல்சியஸ் பாகை வரை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரித்த வெப்பம், அனல் காற்று போன்ற சவால்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வளியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அண்மையில் வெளியாகியிருந்த தகவலின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
http://www.canadamirror.com/natural/04/135790

No comments:

Post a Comment