Monday, July 24, 2017

தினம் தேங்காய் தண்ணீர் குடியுங்கள்: ஏழு நாட்களில் இந்த மாற்றம் நடக்கும்

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம்.
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மாற்றம்?
  • நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும்.
  • உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
  • உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது.
  • தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
  • தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.
  • காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும்.
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.
http://news.lankasri.com/health/03/129250

No comments:

Post a Comment