Saturday, July 15, 2017

5000 வருடங்களாக கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடந்த விஷ்ணு கோவில்!

நம் மன்னர்கள் உலகில் உள்ள பெல்வேறு நாடுகளை போரிட்டு வென்று அங்கு நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பினார்கள் என்று நம் வரலாறு கூறுகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், 5000 வருடங்களாக கடலுக்கு அடியில் புதைந்து கிடந்த விஷ்ணுவின் கோவில் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு அருகாமையில் இருக்கும் கடல் பகுதியில் தான் இந்த கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கடலுக்கு மிக அருகாமையில் கட்டப்பட்டிருக்கும் என்றும் பின்பு கடல் மட்டம் உயர்ந்ததால் இது கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
படுத்துக்கொண்டிருப்பது போல் உள்ள விஷ்ணுவின் சிலை, அமர்ந்திருப்பது போல் உள்ள தேவ கன்னியர்களின் சிலைகள், பெரிய பாறாங்கற்களை கொண்டு செதுக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சிலைகள் என பல சிலைகள் இந்த கடற்கோவிலில் உள்ளது.
இப்படி ஒரு அதிசய கோவில் கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதை கண்டுபிடித்த இந்தோனேசிய அரசு அதை பொக்கிஷமாக கருதி, அந்த கோவிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாத வகையில் கடலுக்கு அடியில் ஒரு பூங்கா அமைத்து இக்கோவிலை பாதுகாத்து வருகிறது. ஆழ்கடலில் மூழ்கி அதிசயங்களை காணவிரும்பும் பலர் இந்த பகுதிக்கு வந்து இக்கோவிலை கண்டு ஆச்சர்யமடைகின்றனர்.
இது போல் நம் மன்னர்களால் கட்டப்பட்ட எத்தனை கோவில்கள் இன்னும் கடலுக்கு அடியில் மூழ்கிக்கிடக்கின்றனவோ அதெல்லாம் எப்போது உலகின் வெளிச்சத்திற்கு வருமோ தெரியவில்லை.

http://tamil.bioscope.in/exclusive-article/hindu-temple-in-bali-island

No comments:

Post a Comment