தொலைக்காட்சி!!

Thursday, June 8, 2017

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட மோதலால் பதற்றம்!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் நடந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
முதலாம் குறுக்கு வீதியில் நின்ற பயணிகளை ஏற்றுவதற்கு தனியார் பேருந்து ஊழியர்கள் முற்பட்டதாகவும், அதே போல் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளை ஏற்றுவதில் இ.போ.ச ஊழியர்களும் முற்பட்டுள்ளனர்.
இவ்வாறு பயணிகளை ஏற்றுவதற்கு இரு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பேருந்தின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.http://www.tamilwin.com/community/01/148388

No comments:

Post a Comment