தொலைக்காட்சி!!

Wednesday, June 14, 2017

கனடாவில் அடித்து கொலை செய்யபட்ட இரு இலங்கைத் தமிழர்கள்!


தம்பு சந்திரபாபுயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா(வளலாய்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நல்லையா இராசேஸ்வரி(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவரதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன் ஆகியோரின்  அன்புத் தந்தையும்,
அருள்நாயகி(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(திரு- கனடா), புஷ்பராணி(வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி(கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சந்திரபாபு பிரியந்தன்  
கனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு பிரியந்தன்  அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரபாபு, நவரதி தம்பதிகளின்  அன்புப் புதல்வர் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
நவரதி சந்திரபாபு(மனைவி) — கனடா
தொலைபேசி:+14164317510
திரு(மணியம்- சகோதரர்) — கனடா
தொலைபேசி:+14168854374
புஷ்பராணி தவராஜா(வண்ணம்) — கனடா
செல்லிடப்பேசி:+16477629454
கந்தவேள்(சாம்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61394365964
யசோ முருகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788938650
அருள்நாயகி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61398985298
http://www.kallarai.com/ta/obituary-20170613215858.html

கனடாவில் அடித்து கொலை செய்யபட்ட இரு இலங்கைத் தமிழர்கள்!


கனடாவின் கேல்கரியில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பு சந்திரபாபு (வயது 56) மற்றும் அவரது மகன் சந்திரபாபு பிரியந்தன் (வயது 25) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கேல்கரியின் Panorama Hills பகுதியில் உள்ள வீட்டில் சனிக்கிழமை(10/6/2017) காலை 5.15 மணியளவில் இருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கேல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார், சம்பவ தினத்தன்று வீட்டில் பலர் கூடியிருந்த வேளை பயங்கர விவாதம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
விவாதம் கைகலப்பாக மாறவே ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதில் படுகாயமடைந்த இருவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் சந்தேகப்படும் குற்றவாளியாக கருதப்படும் நபர், அந்த குடும்பத்தை சார்ந்தவர் இல்லை என்ற போதிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரீட்சியமானவர் எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தின் போது உடனிருந்த பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருவருடைய பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்ட போதிலும், இறப்புக்கான காரணத்தை பொலிசார் வெளியிடவில்லை.
தம்பு சந்திரபாபு, சந்திரபாபு பிரியந்தன் ஆகிய இருவரும் டொரண்டோவில் இருந்து கேல்கரிக்கு குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/canada/04/128792

No comments:

Post a Comment